அனல் மின் நிலையக் கட்டுமான பணியில் ஏற்பட்ட விபத்து… ரூ.10 லட்சம் நிவாரணம்..! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!

tamilnadu cm mk stalin

எண்ணூர் அனல் மின் நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.


இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: “எண்ணூரில் பெல் நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரையும், மின்வாரிய தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தொடர் விடுமுறை!. ரயில் பயணிகளுக்கு புதிய ரூல்ஸ்!. நடைமேடையில் நின்றால் அபாரதம்!. ரயில்வே அதிரடி!

Wed Oct 1 , 2025
விஜயதசமி, ஆயுத பூஜை தொடர் விடுமுறைகளை முன்னிட்டு தெற்கு ரயில்வே பயணிகளுக்கு பல விதிகளை அறிவித்துள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. வரும் அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தினங்களில் விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. காலாண்டு விடுமுறையுடன் சேர்ந்தாற்போல, இந்த நாட்கள் வருவதால் லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ரயில்களில் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது. இந்தநிலையில், தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு, […]
train rules

You May Like