2026இல் அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஷால்..!! விஜய்யுடன் கூட்டணியா..?

நடிகர் விஷால் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் களம் காண இருப்பதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் மக்களுக்கு தேவையானதை அவர்களின் பிரதிநிதியாக இருந்து முழுமையாக வழங்குவதே அரசியலின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் என் பெயரும் இருக்கும். மக்களுக்கு போதுமான வசதிகள் இல்லை. அதனால்தான் நான் அரசியலுக்கு வருகிறேன்” என தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் மூலம் தனது அரசியல் பிரவேசத்தை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில், தற்போது விஷாலும் அரசியல் தொடங்குவதை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : ‘Boat’ நிறுவன யூசரா நீங்கள்..? உங்கள் ரகசிய தகவல்கள் லீக்..!! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!

Chella

Next Post

சக்திவாய்ந்த நிலநடுக்கம்!... ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு!

Mon Apr 15 , 2024
Earthquake: பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் பசுபிக் பெருங்கடல் மீது அமைந்துள்ள தீவுக்கூட்ட நாடான பப்புவா நியூ கினியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள நியூ பிரிட்டன் (New Briton Region Earthquake) மாகாணத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. நிலத்திற்கடியில் 79 கி.மீ ஆழத்தில் மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக […]

You May Like