கி.பி. 7ம் நூற்றாண்டு பொக்கிஷம்.. வரலாறு பேசும் குகைக் கோயில்.. மெய்சிலிர்க்க வைக்கும் ஓவியங்கள்..!! எங்கே தெரியுமா..?

kudaivarai kovil 1

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் அருகே திருநந்திக்கரை பகுதியில், வரலாறு மற்றும் ஆன்மிகம் ஒன்றாக கலந்த ஒரு அபூர்வ தலம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள திருநந்திக்கரை குகைக் கோயில், தமிழகத்தின் தொன்மையான குடைவரைக் கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது.


பல்லவர் கால கட்டடக்கலை சிறப்பை பிரதிபலிக்கும் இந்தக் குகைக் கோயில், கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பாறைகளை வெட்டி உருவாக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தெற்கு நோக்கி அமைந்துள்ள இந்த கோயில், திருநந்திக்கரை குன்றின் சரிவில், தரை மட்டத்திலிருந்து சுமார் 4 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. குகைத் தளத்திற்குச் செல்ல 10 படிக்கட்டுகள் வெட்டப்பட்டுள்ளன.

கோயிலின் உட்புற அமைப்பு முகப்பு மண்டபம், முக மண்டபம், உள் மண்டபம் மற்றும் கருவறை என பிரிக்கப்பட்டுள்ளது. முகப்பு மண்டபத்தின் மேற்புறச் சுவரில் விநாயகர் உருவம் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. மேலும், உள் மண்டபத்தின் மேற்குச் சுவரில் அகழப்பட்ட கருவறையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அதன் பாணம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குகைக் கோயிலின் முக்கிய சிறப்புகளில் ஒன்று, இங்கு கண்டறியப்பட்ட நான்கு வட்டெழுத்து கல்வெட்டுகள் ஆகும். அவை அந்த கால சமூக, மத மற்றும் அரசியல் தகவல்களை வெளிப்படுத்துகின்றன. மேலும், கோயிலில் காணப்படும் சுவர் ஓவியங்கள் கி.பி. 9 மற்றும் 10ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தையவை என மதிப்பிடப்படுகிறது. இவ்வோவியங்களில் சில கேரள பாணியில் அமைந்துள்ளதுடன், ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசக் காட்சிகளை சித்தரிக்கும் வகையில் வரையப்பட்டுள்ளன.

இயற்கை தாவர நிறங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஓவியங்கள், அந்த கால கலை நுணுக்கத்தையும், பண்பாட்டு செழிப்பையும் வெளிப்படுத்துகின்றன. இந்தக் குடைவரைக் கோயில், அருகிலுள்ள திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில் உடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது.

தற்போது, இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில் மத்திய அரசின் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது. கோயில் முகப்பின் மேற்குப் பாறைச் சுவரில் காணப்படும் கல்வெட்டுகள், திருநந்திக்கரை மகாதேவர் பற்றிய பல்வேறு தகவல்களை பதிவு செய்துள்ளன.

Read more: அடுத்த அச்சுறுத்தல்..! சொகுசு கப்பலில் புதிய வைரஸ்..! 3 பேர் பலி..! மற்றொரு கொரோனா வருமா..?

English Summary

AD 7th century treasure.. Cave temple that speaks history.. Mesmerizing paintings..!! Do you know where..?

Next Post

ஆட்சியமைப்பதில் தொடரும் சவால்..! விஜய் எப்படி சமாளிக்கப் போகிறார்..?

Wed May 6 , 2026
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் தமிழக அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இருந்தாலும், தனித்து ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை எட்டவில்லை. தற்போதைய நிலவரப்படி, ஆட்சி அமைக்க இன்னும் 11 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றனர். இடதுசாரி கட்சிகள் விஜய்க்கு ஆதரவளிக்கலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டாலும், அந்தக் கட்சிகளின் தலைமைகள் இதுவரை எந்தத் தீர்மானத்தையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனால், விஜய்யுடன் கூட்டணி அமைப்பதில் […]
1200 675 23624182 964 23624182 1740558251530

You May Like