Admission | தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் முன்கூட்டியே தொடங்கும் மாணவர் சேர்க்கை..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதாவது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை, உயர்கல்வியில் இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை போன்றவை வழங்கப்படுகிறது. கொரோனா காலத்திற்கு பின் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

இந்நிலையில், 2024-25ஆம் கல்வியாண்டு இன்னும் சில மாதங்களில் தொடங்கப்பட இருக்கிறது. அதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு முன்னதாகவே மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை இரட்டை இலக்கத்திற்கு உயர்த்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

English Summary : Admission of Tamil Nadu Government Schools

Read More : Himachal | ஆட்சி கவிழும் அபாயம்..!! முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சுக்வீந்தர் சிங்..!!

Chella

Next Post

ANNAMALAI | "விளம்பரத்தில் சீன கொடி; இந்திய இறையாண்மைக்கு எதிரான திமுக" - அண்ணாமலை கடும் கண்டனம்.!

Wed Feb 28 , 2024
ANNAMALAI: திமுக விளம்பரத்தில் சீனா கொடி இடம் பெற்றது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பிரதமர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டார். தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு விழாக்களில் கலந்து […]

You May Like