Himachal | ஆட்சி கவிழும் அபாயம்..!! முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சுக்வீந்தர் சிங்..!!

இமாச்சல பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களில் இமாச்சல பிரதேசமும் ஒன்று. இந்த மாநிலத்தில் மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2022 இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. அங்கு ஆட்சியை பிடிக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இத்தகைய சூழலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதன்மூலம் இமாச்சல பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழந்தது. புதிதாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.

காங்கிரஸ் சார்பில் புதிய முதல்வராக சுக்வீந்தர் சிங் சுகு தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல்வராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் அங்கு ராஜ்யசபா தேர்தல் நடந்தது. காலியாகவுள்ள ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு 2 பேர் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் அபிசேக் மான்வி சிங்கி, பாஜக சார்பில் ஹர்ஸ் மகாஜன் ஆகியோர் போட்டியிட்டனர். காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை உள்ள நிலையில், அபிசேக் மான்வி சிங்கி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய தினம் நடந்த ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர். இதனால் பெரும்பான்மை இருந்தாலும் கூட காங்கிரஸ் கட்சியின் அபிசேக் மான்வி சிங்கி தோல்வியடைந்தார்.

பாஜக வேட்பாளர் ஹர்ஸ் மகாஜன் வெற்றி பெற்றார். இதையடுத்து தான் சுக்வீந்தர் சிங்கிற்கு எதிராக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இமாச்சல் பிரதேசத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள விக்ரமாதித்யா சிங் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இவர் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகன் ஆவார். இவர் முதல்வர் பதவி மீது கண்வைத்த நிலையில், அது நடக்கவில்லை. இத்தகைய சூழலில் தான் விக்ரமாதித்யா சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ளளார். மேலும், 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சியின் தொடர்புக்கு அப்பாற்பட்டு உள்ளனர். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது.

இத்தகைய சூழலில் தான் இமாச்சல பிரதேச நிலைமையை சரிசெய்ய காங்கிரஸ் மேலிடம் 2 பொறுப்பாளர்களை நியமித்தது. கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார், முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹுடா ஆகியோரை நியமனம் செய்துள்ளது. இவர்கள் இமாச்சல பிரதேசத்தில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் தான், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும்படி சுக்வீந்தர் சிங்கிற்கு காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, சுக்வீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தை காங்கிரஸ் பொறுப்பாளர்களிடம் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன்மூலம் சுக்வீந்தர் சிங்கிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய காங்கிரஸ் எம்எல்ஏக்களை சமாதானம் செய்து ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. மேலும், இன்றைய தினம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி புதிய முதல்வரும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கான பணியை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. இதனால் இமாச்சல் பிரதேசத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது.

English Summary : CM Sukhwinder Singh Sukhu Resigns Amid Political Turmoil In Himachal Pradesh

Read More : Vijayadharani | விஜயதரணியால் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு..!!

Chella

Next Post

Admission | தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் முன்கூட்டியே தொடங்கும் மாணவர் சேர்க்கை..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

Wed Feb 28 , 2024
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதாவது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை, உயர்கல்வியில் இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை போன்றவை வழங்கப்படுகிறது. கொரோனா காலத்திற்கு பின் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இந்நிலையில், 2024-25ஆம் கல்வியாண்டு இன்னும் சில மாதங்களில் தொடங்கப்பட இருக்கிறது. அதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, […]

You May Like