“அடுத்த கட்சி கொடியை பிடிக்கும் அளவுக்கு அதிமுகவினர் இழிபிறவிகள் இல்லை.. டிடிவி விரக்தியில் பேசுறாரு..” செல்லூர் ராஜு பேட்டி!

Sellur raju vijay

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ மாற்றுக்கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையுமா என்பது எனக்கு தெரியாது.. அது பொதுச்செயலாளரின் முடிவு.. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் பேசிய போது தவெக கொடியை காட்டுகின்றனர்.. விஜய்க்காக குரல் கொடுத்தவர் தான் எடப்பாடி பழனிசாமி தான் தவெக தொண்டர்கள் கூறுகின்றனர்.. தவெக தொண்டர்கள் தன்னெழுச்சியாக தவெக தொண்டர்கள் வருகின்றனர்..


ஆனால் காழ்ப்புணர்ச்சியில் அதிமுகவினரே தவெக கொடியை காட்டியதாக டிடிவி தினகரன் கூறுகிறார்.. டிடிவி என்ற செல்லாகாசை பற்றி பேசாதீங்க.. அவரை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை என்ற எங்கள் கட்சி தரந்தாழ்ந்து போகும் கட்சியே இல்லை.. அதிமுக தொண்டர் யாராவது அடுத்த கட்சி கொடியை தூக்கியதாக வரலாறு உண்டா? கூட்டணி வைத்தால் தோள் கொடுப்போம்.. எங்களை எதிர்த்தால் மிதித்துவிட்டு போவோம்.. எங்கள் தலைவர்கள் என்ன சொல்கின்றனரோ அதையே பின்பற்றுவோம்..

அதிமுகவினர் அடுத்த கட்சி கொடியை பிடிக்கும் இழிபிறவிகள் இல்லை.. எங்கள் கட்சி கொடியை தான் நாங்கள் தூக்குவோம்.. சில இடங்களில் அதிமுக கொடியையே அதிமுகவினர் தூக்கமாட்டார்கள்.. நாங்கள் எப்படி அடுத்த கட்சி கொடியை தூக்கி ஆட்டுவோமா? அம்மா இல்லாததால் அதிமுக தள்ளாடும் நிலை இல்லை.. அதிமுக தற்போது பலமாக உள்ளது.. அதிமுக எப்போதும் தள்ளாடியது இல்லை..” என்று தெரிவித்தார்..

தொடர்ந்து விசிக குறித்து பேசிய அவர் “ விசிகவினர் வன்முறை கட்சி.. திருமாவளவன் நன்றாக இருந்தார் ஆனால் தற்போது மாறிவிட்டார்.. அந்த கட்சியினர் வேகமானவர்கள்.. கட்சி தொண்டர்களை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் விஜய்க்கு கூறும் திருமாவளவன் முதலில் தனது தொண்டர்களை கட்டுப்படுத்த வேண்டும்..” என்று தெரிவித்தார்..

மேலும் “ சினிமாவில் அரசியலிலும் கொடி நாட்டியவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தான்.. அவரை தவிர யாரும் இல்லை.. எம்.ஜி.ஆரை வெல்ல எம்.ஜி.ஆரால் தான் முடியும்.. எம்.ஜி.ஆரோடு விஜய்யை ஒப்பிடக் கூடாது.. அவரே எம்.ஜி.ஆர் மாதிரி என்று தான் சொல்கிறார்..” என்று தெரிவித்தார்..

முன்னதாக  எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட கூட்டத்தில் தவெக கொடி உடன் சிலர் இருந்ததால் அதிமுக – தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதாக கூறியிருந்தார்.. ஆனால் அதிமுகவினரே தவெக கொடியை பிடித்ததாக டிடிவி தினகரன் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க விஜய் கட்சி ஆரம்பித்துள்ளாரா? அதிமுக தவெக கூட்டணி குறித்து டிடிவி தினகரன் சரமாரி கேள்வி!

RUPA

Next Post

பரபரக்கும் 2025 தேர்தல் களம்.. முதல் ஆளாக வேட்பாளரை அறிவித்தார் டிடிவி தினகரன்! அரூரில் போட்டியிடுவது இவர் தான்!

Sat Oct 11 , 2025
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. முக்கிய தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜய், சீமான் என 4 முனைப்போட்டி நிலவிய நிலையில் கரூர் சம்பவத்திற்கு பின் கூட்டணி கணக்குகள் மாறத் தொடங்கி உள்ளது.. அதிமுக பாஜக கூட்டணியில் […]
ttv dinakaran2234 1595052218

You May Like