அடுத்தடுத்து இழப்புகளை சந்திக்கும் ஓபிஎஸ் மீண்டெழுவாரா…..?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த அந்த நொடியில் இருந்து அரசியலில் பன்னீர்செல்வத்திற்கு சறுக்கல் தொடங்கி விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.அதன் பிறகு அவருடைய மனைவி மரணம், தற்போது அவருடைய தாய் மரணம் என்று தன்னுடைய குடும்பத்தில் பல இழப்புகளை சந்தித்து இருக்கிறார் ஓபிஎஸ்.

இது ஒரு புறம் இருக்க கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து வழக்கில் கடந்த 23ஆம் தேதி அவருக்கு பாதகமான முறையில் தீர்ப்பு வந்தது அவருக்கு மிகப்பெரிய பேரிடியாக அரசியல் களத்தில் பார்க்கப்பட்டது.

கடந்த 23ஆம் தேதி வெளியான தீர்ப்பின் காரணமாக, எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மகிழ்ச்சியில் இருக்கிறது. ஆனாலும் பன்னீர்செல்வம் தரப்புக்கு இது மிகப்பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது

23ஆம் தேதி பன்னீர்செல்வத்திற்கு எதிராக இப்படி ஒரு தீர்ப்பு வந்த நிலையில், அதற்கு அடுத்த நாளான 24 ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளான அன்றைய தினம் பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் தன்னுடைய 95 வயதில் வயது மூப்பு காரணமாக, உயிரிழந்தார் ஒருவரும் அரசியலில் மிகப்பெரிய சரிவு இன்னொருபுறம் வாழ்க்கையில் தன்னுடைய மனைவி மற்றும் தாயார் உள்ளிட்டோரின் மரணம் என்று அடுத்தடுத்து எழுப்புகளை சந்தித்து வருகிறார் ஓபிஎஸ்.

ஆனாலும் அனைத்தையும் சமாளித்து மீண்டு வந்து அவர் மறுபடியும் அரசியல் பயணம் செய்வார், பொதுமக்களுக்கு சேவை செய்வார் என்று அவருடைய ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

Next Post

குடிபோதையில் மைத்துனரை கொலை செய்த நபர் அதிரடி கைது…..! கோவையில் பரபரப்பு…..!

Mon Feb 27 , 2023
கோயமுத்தூர் மாவட்டம் இடையார்பாளையம் அடுத்துள்ள கோவில்மேடு சபேதார் இரண்டாவது தெருவில் தன்னுடைய தாயார் வேலம்மாளுடன் வசித்து வருபவர் மணிகண்டன் இவர் மரவேலை பார்த்து வருகிறார். இவருக்கு தங்கமாரி மற்றும் செல்வி என்று 2 மூத்த சகோதரிகள் இருக்கிறார்கள். மணிகண்டனுக்கு ஏற்கனவே குடிப்பழக்கம் இருந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் கடந்த 21 ஆம் தேதி வேளாண்டிபாளையம் சின்னண்ணன் செட்டியார் வீதியில் வசித்து வரும் தங்கமாரியை அவருடைய கணவர் ஐயப்பன் அடித்ததாக சொல்லப்படுகிறது. இதனை […]

You May Like