சூப்பர் நியூஸ்…! பள்ளி மாணவிகளுக்கு அகல் விளக்கு திட்டம்..‌! இன்று முதல் ஆரம்பம்

Anbil 2025

மனம், உடல், சமூக ரீதியான இடையூறுகளில் இருந்து பள்ளி மாணவிகளைப் பாதுகாக்கும் வகையில் மாநில அளவில் ‘அகல் விளக்கு’ எனும் புதிய திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இன்று தொடங்கிவைக்கப்பட உள்ளது.


தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்கு, உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக ‘அகல் விளக்கு’ எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இத்திட்டத்தை இன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறார்.

மாணவிகள் தங்களை சமூகப் பிரச்சனைகளில் இருந்து மீட்டு பாதுகாத்துக் கொள்வதற்காக ‘அகல் விளக்கு’ எனும் புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்காக குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. இக்குழுவில் ஆசிரியைகள், மாணவிகள் இடம் பெறுவர்.

மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆசிரியர்கள் கண்டறிந்து அதற்குரிய தீர்வுகளை காண்பர். இதற்கான விழிப்புணர்வு கையேடும் வழங்கப்படும். அந்த கையேட்டில் பிரச்சினைகளை தீர்க்கும் முறைகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக செல்போன், இணையதள பயன்பாட்டாலும் மாணவ- மாணவிகள் பலரும் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: டாய்லெட்டில் நீண்ட நேரம் போன் யூஸ் பண்றீங்களா?. மூலநோய் ஏற்படும் ஆபத்து!. மருத்துவர்கள் எச்சரிக்கை!.

Vignesh

Next Post

சிகரெட் பிடிப்பதால் புற்றுநோய் மட்டுமல்ல; இந்த முதுகெலும்பு நோயையும் ஏற்படுத்தும்!. யாருக்கு அதிக பாதிப்பு?. ஆய்வில் அதிர்ச்சி!.

Sat Aug 9 , 2025
சிகரெட் பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது, அது நம் இதயத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று சிறு வயதிலிருந்தே கேள்விப்பட்டு வருகிறோம். இதனால்தான் சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் நுரையீரல், இதயம் அல்லது புற்றுநோய்க்கு மட்டுமே என்று நாம் அடிக்கடி நினைக்கிறோம். ஆனால் சமீபத்திய ஆய்வில் இது முதுகுத் தண்டுவடத்தையும் பாதிக்கிறது என்று தெரியவந்துள்ளது. நீண்ட நேரம் சிகரெட் பிடிப்பதால் டிஸ்க்குகள் விரைவாக தேய்மானம் அடைகின்றன, இது முதுகுவலி, நடப்பதில் […]
smoking spine 11zon

You May Like