BJP: ஏப்ரல் 12ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் அமித் ஷா…!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 12ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ‌.

திருத்தப்பட்ட அட்டவணையின்படி, மத்திய உள்துறை அமைச்சர் ஏப்ரல் 12-ம் தேதி “மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கைக்குச் செல்லும் அவர் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவுக்கு ஆதரவாக மாலை 3.50 மணி முதல் 4.50 மணி வரை 2 கி.மீ தூரம் வரை ரோட் ஷோவில் பங்கேற்க உள்ளார். பின்னர், மதுரையில் மாலை 6.10 மணி முதல் 7.10 மணி வரை 2 கி.மீ. தூரம் ரோட் ஷோ நடத்தி, பா.ஜ.க வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசனுக்காக பிரசாரம் செய்கிறார்.

ஏப்ரல் 13-ம் தேதி கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் தக்கலைக்குச் செல்லும் அவர் காலை 9.50 மணி முதல் 10.50 மணி வரை பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக 2 கி.மீ தூரம் வரை ரோட் ஷோ பேரணி நடத்துகிறார். பின்னர், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் திருவாரூர் சென்று பாஜக வேட்பாளர் எஸ்ஜிஎம் ரமேஷுக்கு ஆதரவாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். பின்னர் தென்காசி மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியனை ஆதரித்து ரோட் ஷோ நடத்த உள்ளார்.

Vignesh

Next Post

பெரும் சோகம்...! 50 அடி குழியில் விழுந்து பேருந்து விபத்து... 13 பேர் உயிரிழப்பு...!

Thu Apr 11 , 2024
சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் 50 ஊழியர்களை ஏற்றிக்கொண்டு கும்ஹாரியிலிருந்து பிலாய்க்கு திரும்பிய பேருந்து செவ்வாய்கிழமை இரவு 9 மணியளவில் விபத்துக்குள்ளானதில் 13 பேர் இறந்தனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசார் கூறுகையில், பேருந்து கெடியா டிஸ்டில்லரியில் இருந்து ராய்பூர் கும்ஹாரி சாலையை நோக்கி சென்று கொண்டிருந்த போது கும்ஹாரி காவல் […]

You May Like