சுவிஸ் பேங்கில் ரூ.60 கோடி எடுத்தாரா இந்திரா காந்தி? -நாடாளுமன்றத்திலும் எதிரொலித்த சர்ச்சை!!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தேர்தல் செலவுக்காக சுவிஸ் வங்கியில் இருந்து ரூ.60 கோடி பணத்தை எடுத்ததாக தகவல் வெளியான நிலையில், சுவிஸ் நாடாளுமன்றத்திலும் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

சுவிஸ் வங்கியில் இருந்து ரூ.60 கோடியை இந்திரா காந்தி எடுத்ததாக கூறப்பட்ட நிலையில், இது குறித்து விசாரிக்க சுவிட்சர்லாந்து அரசுக்கு இந்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. சுவிட்சர்லாந்தில் குற்றம் நடந்திருப்பதாலும், இந்திராகாந்தி, இந்திய குடிமகள் என்பதாலும், பணம் குறித்த கூடுதல் விவரங்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் இந்திரா காந்தி 40 கோடியை திரும்பப் பெற்றதாக செய்திகள் வந்தன. அதனை தொடர்ந்து 60 கோடி ரூபாய் பெற்றதாக அந்நாட்டின் அப்போதைய பிரதமர் தெரிவித்தார். டிசம்பர் 1979ல், லக்னோவில் உள்ள ஹஸ்ரத் மஹால் பூங்காவில் நடந்த தேர்தல் கூட்டத்தில் சவுத்ரி சரண் சிங் இந்தப் பிரச்சினையை எழுப்பினார்.

தேர்தலின் போது 10,000 ஜீப்புகள் வாங்க இந்திரா காந்தி மற்றும் சஞ்சய் காந்திக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்று சரண் சிங் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் வேட்பாளருக்கு தலா ரூ.5 லட்சம் கொடுக்கப்பட்டதாகவும், வெளிநாட்டில் இருந்து மும்பைக்கு ஏராளமான பணம் வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், இந்திராகாந்தி பணம் திரும்பப் பெற்ற விவகாரம் சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது.

Next Post

ஆப்கானில் இந்துக்களின் சொத்துக்களை திரும்ப அளிக்கும் பணியில் தலிபான் நிர்வாகம்!

Thu Apr 11 , 2024
ஆப்கானிலிருந்து புலம் பெயர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்களின் சொத்துக்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கும் நடவடிக்கையை தலிபான்கள் நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் முந்தைய ஆட்சி அகற்றப்பட்டு தலிபான்கள் ஆப்கான் அரசு நிர்வாகத்தை கைப்பற்றினர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் முந்தைய ஆட்சியாளர்கள் புலம் பெயர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்களின் சொத்துக்களை அபகரித்துக்கொண்டனர். இதனை அப்போதைய பாராளுமன்றத்தில் நரேந்திரசிங் கல்சா என்ற ஹிந்து எம்.பி., குரல் கொடுத்து சொத்துக்களை மீட்டு தர வேண்டும் […]

You May Like