நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட தவெக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. எனினும் ஆட்சியமைக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 10-ம் தேதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த சூழலில் தமிழக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று விசிக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று அழைப்பு விடுத்தார்.. அமைச்சரவையில் பங்கு பெறுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் தெரிவித்திருந்தன.
அதன்படி இன்று ஐயூஎம்எல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தவெக அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஐயூஎம்எல் எம்.எல்.ஏ ஷாஜகான் அமைச்சராகிறார் என்று ஷாஜகான் பெயரை அமைச்சர் பதவிக்கு பரிந்துரைப்பது என ஐயூஎம்எல் மாநில நிர்வாகக் குழு முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறுமா என்பது குறித்து இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று அக்கட்சி தலைவர் திருமாவளன் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ ஆதவ் அர்ஜுனா அவர்கள் விசிகவும், ஐயுஎம்.எல் கட்சியும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.. ஏற்கனவே எங்கள் உயர்நிலைக் குழுவில் அமைச்சரவையில் இடம்பெறாமல் ஆதரவை தர முடிவெடுத்தோம்.. உயர்நிலைக் குழுவில் பெரும்பாலானவர்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று கருத்தை சொன்னதால் அதனை மீண்டும் பரிசீலிப்பதாக கூறியிருந்தோம்..
ஆதவ் அர்ஜுனா அவர்களின் அழைப்புக்கு பின்னர், கட்சியின் பொதுச்செயலாளர்கள், முன்னணி பொறுப்பாளர்கள் இருக்கும் குழுவில் இதுகுறித்து பேசியிருக்கிறோம்.. இன்று மாலைக்குள் என்ன முடிவை அறிவிப்போம். முன்னணி பொறுப்பாளர்கள் ஆரம்பத்தில் இருந்தே அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கருத்தை தெரிவித்து வருகின்றனர்.. மீண்டும் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறது.. இருந்தாலும் அந்த முடிவை முறை.” என்று தெரிவித்தார்..
Read More : மீண்டும் உயிர்கொல்லி எபோலா பரவல்.. நாடு முழுவதும் உச்சக்கட்ட எச்சரிக்கை.!



