வீட்டுக்கு வந்த பெயிண்டருடன் உல்லாசம்! வாக்கிங் சென்ற கணவரை அடித்து தூக்கிய கார்! பதபதைக்கும் சம்பவம்!

Crime 2026 2

கர்நாடக மாநிலம் விஜயபுரா ஏகதா நகரை சேர்ந்த 42 வயதான ராஜசேகர் பிராதர், கடந்த அக்டோபர் 4ஆம் தேதி அதிகாலை விஜயபுரா ரிங் ரோடு – ஜும்னல் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த கருப்பு நிற மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி கார் மோதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இந்த விபத்து தொடர்பாக உயிரிழந்தவரின் மனைவி அஸ்வினி, அடையாளம் தெரியாத வாகனம் மோதி தனது கணவர் இறந்துவிட்டதாக போக்குவரத்து காவல்துறையில் கண்ணீருடன் புகார் அளித்தார். அதனடிப்படையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட சாதாரண விபத்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


ஆனால், காரின் அதீத வேகம் மற்றும் விபத்து நடப்பதற்கு சற்று முன்பாக இருசக்கர வாகனத்தில் ஒருவர் பிராதரை நோட்டமிட்டு சென்றது தொடர்பான தடயங்கள் போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. இந்த வழக்கு உடனடியாக நகர துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான உயர்மட்ட விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியாக, தம்பதியரின் வீட்டின் பெயிண்டிங் பணிகளை மேற்கொண்ட ஆனந்த் என்பவரை பிடித்து விசாரித்தபோது, அவரும் அஸ்வினியும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் தீவிர கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், விபத்தாக காட்டப்பட்ட இந்த மரணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட படுகொலை என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

விசாரணையில், ராஜசேகர் பிராதர் – அஸ்வினி தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், 6 வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இவர்கள் புதிதாக கட்டிய வீட்டிற்கு வண்ணம் பூச வந்த ஆனந்துடன் அஸ்வினிக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ முடிவு செய்ததால், அதற்கு தடையாக இருந்த கணவர் ராஜசேகர் பிராதரை தீர்த்துக்கட்ட அஸ்வினி திட்டம் தீட்டியுள்ளார். இதற்கு உடன்பட்ட ஆனந்த், தனது நண்பரான பெயிண்டர் சச்சின் மற்றும் ஒரு சிறுவனின் உதவியுடன் கொலைக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

சம்பவத்தன்று அதிகாலை பிராதர் வாக்கிங் புறப்பட்டதை அஸ்வினி ஆனந்திற்கு போனில் தகவல் கொடுத்துள்ளார். ஆனந்த் இருசக்கர வாகனத்தில் பிராதரைப் பின்தொடர்ந்து சென்று அவர் செல்லும் இடத்தை உடனுக்குடன் போனில் தெரிவிக்க, பதிவு எண் இல்லாத கருப்பு நிற ஸ்கார்பியோ காரில் பதுங்கியிருந்த சச்சினும் அந்தச் சிறுவனும், ஜும்னல் சாலையில் பிராதர் மீது காரை பின்னால் இருந்து மோதி படுகொலை செய்துள்ளனர்.

பின்னர் காரை மறைவிடத்தில் நிறுத்திவிட்டு, இது வழக்கமான சாலை விபத்து என நினைத்து வழக்கம் போல் நடமாடியுள்ளனர். தற்போது மனைவி அஸ்வினி, கள்ளக்காதலன் ஆனந்த், சச்சின் மற்றும் இதில் தொடர்புடைய சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : வெளிநாட்டு வேலைக்கு போறீங்களா? மனித கடத்தலில் ஏஐ! அதிரவைக்கும் விபரீத சம்பவங்கள்!

Next Post

₹100 கோடி மெத்தம்பெட்டமைன் வழக்கில் திடீர் ட்விஸ்ட்! கடத்தல் கும்பலிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ்! பாய்ந்தது ஆக்‌ஷன்!

Tue Oct 20 , 2026
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்குக் கடல் மார்க்கமாகப் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தின் கடலோர கிராமம் ஒன்றில் இருந்து பெருமளவிலான தடைசெய்யப்பட்ட செயற்கை போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு, இலங்கைக்குக் கடத்தப்பட உள்ளதாக அதிகாரிகளுக்கு ரகசிய உளவு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், கடந்த அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் […]
Nagai 2026

You May Like