ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம்.. ரூ.30 முதல் விற்பனை செய்ய தமிழக அரசு திட்டம்!

WhatsApp Image 2026 08 30 at 6.24.33 PM 1 1 1

வெங்காயம் வாங்க இனி மார்க்கெட்டுக்கு செல்லும் பொதுமக்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் தமிழக அரசு புதிய நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. வெளிச்சந்தையில் அதிகரித்து வரும் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் வெங்காயத்தை விற்பனை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


இதற்கான பணிகளை கூட்டுறவுத்துறை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 7,000 கிலோ வெங்காயத்தைப் பெறுவதற்காக இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பான NAFED-க்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. வெங்காயம் கிடைத்தவுடன் திட்டமிட்ட ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தற்போது சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்ந்திருப்பதே அரசின் இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக உள்ளது. சமையலில் தினசரி பயன்படுத்தப்படும் பொருளாக இருப்பதால், விலை உயர்வு நேரடியாக குடும்பங்களின் மாதாந்திர செலவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த மாத இறுதியில் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம், தற்போது சில்லறை சந்தையில் சுமார் ரூ.60 வரை விற்பனையாகிறது. சின்ன வெங்காயத்தின் விலையும் இதே காலகட்டத்தில் ரூ.40 முதல் ரூ.50 என்ற நிலையில் இருந்து தற்போது கிலோ ரூ.70 வரை அதிகரித்துள்ளது.

வெங்காய விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிச்சந்தை விலையைவிட குறைவாக ரேஷன் கடைகளில் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி ஒரு கிலோ வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40 வரையிலான விலையில் கிடைக்கச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த விலையில் விற்பனை செய்வது தொடர்பான இறுதி முடிவு மற்றும் செயல்படுத்தப்படும் முறைகள் குறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வேண்டியுள்ளது. எந்தெந்த ரேஷன் கடைகளில் வெங்காயம் கிடைக்கும், குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வளவு அளவு வழங்கப்படும், விற்பனை விலை என்ன என்பது போன்ற விவரங்களும் அந்த அறிவிப்பில் இடம்பெறும்.

NAFED-லிருந்து வெங்காயம் பெறப்பட்ட பின்னர் விற்பனை நடவடிக்கைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திட்டம் நடைமுறைக்கு வந்தால், வெளிச்சந்தையில் விலை உயர்வால் சிரமப்படும் குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

Also Read: பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

Saranya

Next Post

வேலை விளம்பரத்தை நம்பி சென்ற பெண்.. பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல்! தப்பித்த பெண் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Sun Aug 30 , 2026
ஒரு வீட்டிலிருந்து அதிகாலையில் ஜன்னல் வழியாக தப்பி வெளியேறிய பெண்ணின் தகவல், அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்ததாக கூறப்படும் பாலியல் சுரண்டல் சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. வீட்டு பராமரிப்பு வேலைக்காக வந்ததாக நினைத்த அந்த பெண், தனது கடவுச்சீட்டு பறிக்கப்பட்டு, வேறு ஒரு பணிக்கு கட்டாயப்படுத்தப்பட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தப்பிய பெண் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வீட்டை அதிகாரிகள் நீண்ட நாட்களாக கண்காணித்துள்ளனர். அந்த வீட்டிற்கு ஆண்கள் தொடர்ந்து […]
woman crying

You May Like