தமிழகமே சூப்பர்…! மூத்த குடிமக்களுக்கு “அன்புச்சோலை” திட்டம்…! இன்று தொங்கி வைக்கும் முதல்வர்…!

MK Stalin 2025

புதுக்கோட்டை, திருச்சியில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், மூத்த குடிமக்களின் வாழ்வை மேம்படுத்தும் ‘அன்புச்சோலை’ திட்டத்தை இன்று தொடங்கி வைக்க உள்ளார்.


புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெறும் அரசுநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். இதில் ரூ.767 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைக்கிறார். பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், மூத்த குடிமக்களின் வாழ்வை மேம்படுத்த, வீடுகளில் உள்ள முதியவர்கள் மனம் சோர்வடையாமல் ஊக்கம் பெற உதவும் வகையில் ‘அன்புச் சோலை’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. திருச்சியில் இன்று பகல் 12.30 மணி அளவில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் இந்த புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன.

இந்த திட்டத்தின்கீழ் தொடங்கப்படும் ‘அன்புச்சோலை – முதியோர் மனமகிழ் வள மையங்கள்’ திட்டம் மூத்த குடிமக்களின் ஆரோக்கியமான வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில் சமூக மையங்களாக செயல்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் தலா 2 மையங்கள், தொழில் துறைமாவட்டங்களான ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, சென்னைமாநகராட்சியில் தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் என மொத்தம் 25 அன்புச்சோலை மையங்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படுகின்றன. இங்கு பொழுதுபோக்கு அம்சங்கள், யோகா, நூலகம் மற்றும் முதியோருக்குத் தேவையான திறன் மேம்பாடு சேவைகள் வழங்கப்பட உள்ளன.

Vignesh

Next Post

வரும் நவ. 15-க்குள் நியாய விலை கடைகளுக்கு கோதுமை...! தமிழக அரசு அறிவிப்பு...!

Mon Nov 10 , 2025
தமிழகத்தில் உள்ள 12,573 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், நவ. 15-க்குள் நியாய விலை கடைகளுக்கு கோதுமை 100% அனுப்பப்பட்டுவிடும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது நாளிதழில் வந்த செய்தியை வைத்து எடப்பாடி பழனிசாமி 12,573 கடைகளில் கோதுமை இல்லை என்று கூறியிருக்கிறார். ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் கோதுமை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு […]
Ration 2025

You May Like