DCM பதவி கேட்கும் அன்புமணி!. வார்னிங் கொடுத்த திருமா!. தவெக கூட்டணியில் வெடிக்கும் அடுத்த சண்டை!

tvk anbumani 30kb

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக கூட்டணியில் இணைய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக கூட்டணியில் பாமக இணைவதற்கு, தமக்கு அல்லது தங்களின் கட்சிக்கு ‘துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அன்புமணி தரப்பு வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படும் இந்தத் தகவல், மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.


அண்மையில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், தற்போதைய நிலையில் தவெக கூட்டணியில் பாமக இல்லை என்றும், ஆனால் வருங்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் பொடிவைத்துப் பேசியிருந்தார். அவரது இந்தக் கருத்து, திரைக்குப் பின்னால் கட்சிகளுக்கு இடையே ஆட்சி அதிகாரப் பகிர்வு குறித்தான ரகசிய பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையே, பாமக இடம்பெறும் எந்தவொரு கூட்டணியிலும் தங்களால் தொடர முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அன்புமணி வைத்துள்ள இந்த திடீர் துணை முதலமைச்சர் பதவி டிமாண்ட், தவெக கூட்டணியில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, எதிர்வரும் தேர்தல் கணக்குகளை எப்படி மாற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.

1newsnationuser5

Next Post

உக்ரைனுக்கு புதிய அதிபரை தேர்வு செய்யவேண்டும்!. டிரம்ப் பேச்சால் பதற்றம் அதிகரிப்பு!

Sun Oct 11 , 2026
அமெரிக்கா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நிலவி வந்த மோதல் போக்கு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ரஷ்யாவுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள டீசல் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் உரசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை உக்ரைன் தரப்பு போருக்கான மறைமுக முதலீடு என விமர்சித்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் தாக்கு தொடுத்துள்ளார். உக்ரைன் மக்கள் தங்களுக்கு […]
zelensky trump

You May Like