தமிழகத்தை உலுக்கிய அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கு.. நாளை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு..!!

anna univercity rape case

சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி நாளை காலை 10.30 மணிக்கு ஞானசேகரை வழக்கில் தீர்ப்பை அறிவிக்கிறார்.


சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஞான சேகரன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆன்லைன் வாயிலாக முதல்கட்ட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர். மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஞானசேகரனுக்கு மட்டுமே தொடர்பு உள்ளது என அந்த குற்றப்பத்திரிகையில் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ஞானசேகரனின் செல்போன் உரையாடல்கள் அனைத்தும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும், ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளதால், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனவும் ஞானசேகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மகளிர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே, சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால், இவ்வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் 29 சாட்சிகளும், நூற்றுக்கு மேற்பட்ட ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இருதரப்பு வாதங்களும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, வழக்கின் தீர்ப்பை வரும் மே 28ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more: முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தில் வேலை..!! மாதம் ரூ.60,000 சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

English Summary

Anna University student sexual assault case that shook Tamil Nadu.. Women’s court verdict tomorrow..!!

Next Post

வகுப்புகளை புறக்கணித்தால் மாணவர் விசா ரத்து.. இடியை இறக்கிய டிரம்ப்..!!

Tue May 27 , 2025
US issues warning to Indian and International students, skipping classes may lead to visa cancellation
us visa 1

You May Like