செய்யாறு சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம்.. திமுக அரசை கடுமையாக சாடிய அண்ணாமலை..!

67bc6feae8ae1 annamalai slams dmks language policy hypocrisy 241101450 16x9 1

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்ததாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் கோபமும் அளிக்கிறது. இதுபோன்ற கொடூரங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது, திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி.

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலை ஆகிவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில், கட்டுக்கடங்காத போதைப் பொருள் புழக்கம், சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ, குற்றவாளிகளுக்கு எந்த அச்சமும் இல்லாத நிலை என, தமிழகம் ஒரு இருண்ட நிலைக்குப் போய்விட்டது. இவற்றைச் சரிசெய்து, தமிழகத்தை மீட்டெடுக்கவே, சில காலம் தேவைப்படும்.

இத்தகைய மோசமான சூழலில், திமுக ஆட்சி, இன்று தமிழகத்தைத் தள்ளியிருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும். சிறுமிக்கும் குடும்பத்தினருக்கும் முழு பாதுகாப்பும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Read more: ஓட்டு போட ஊருக்கு போறீங்களா..? ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிச்சா ஒரே ஒரு கால் பண்ணுங்க..!

English Summary

Annamalai strongly criticized the DMK government over the gang rape of a minor girl in Cheyyar..!

Next Post

"எப்போதும் உண்மை உறங்காது.." பிரேமலதாவுக்கு நன்றி சொன்ன இபிஎஸ்..!

Tue Apr 21 , 2026
தமிழ்நாட்டில் நாளை மறுதினம் தேர்தல் நடைபெற உள்ளது.. அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை உடன் நிறைவடைகிறது.. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் ” அதிமுகவை உடைப்பதற்கு இன்றைய முதலமைச்சர் எத்தனை திட்டம் போட்டார்.. அதை எல்லாம் முறியடித்து தான் இன்று அதிமுகவும் பாமகவும் கூட்டணி வைத்திருகிறோம்.. எங்கள் கூட்டணியை தோற்கடிக்க ஸ்டாலினால் மட்டுமல்ல.. […]
eps premalatha

You May Like