மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டது முதல், அண்ணாமலைக்கு எந்த வகையான மாநில அல்லது தேசிய பதவியும் வழங்கப்படவில்லை. முன்னாள் தலைவர் என்ற முறையில் மட்டுமே அவர் பாஜவில் உள்ளார். இதனால் கட்சி சார்பான நிகழ்ச்சிகளில் பெரிதாக பங்கு பெறாமல் இருந்துவருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அண்ணாமலை மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இடையே சில மோதல் போக்கு நிலவி வருகிறது.
சமீபத்தில் கூட கரூரில் நடந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த அண்ணாமலை “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கரூர் பாஜக சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும்’’ என்று திடீரென அறிவித்தார். இந்த அறிவிப்பு நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நயினார், அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்கக்கூடாது என தீவிரமாக இருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக நயினார் ஆதரவாளர்கள் டெல்லி தலைமைக்கும் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்க அண்ணாமலை மும்முரம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக டிடிவி தினகரன், ஓபிஎஸ், அன்புமணி, ஜான் பாண்டியனை அவர் ரகசியமாக சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என தினகரனும், அரசியல் ஆளுமை ஆகலாம் என அண்ணாமலையும் போடும் கணக்கே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் கட்சியில் ஏற்படும் மோதல் அரசியல் வட்டாரத்தைல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: 2025-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு.. யார் யார் தெரியுமா?