அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப்போவதாக வெளிவரும் தகவல்கள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; திமுகவினர்தான் அடிமை மாடலும், பாசிச அரசியலும் செய்கிறார்கள். முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா பெண்களை கேவலமாக பேசுகிறார். பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. வகுப்பறையில் ப வடிவில் இருக்கைகள் இருக்க வேண்டும் என்பது என்ன அடிப்படையில் என்பது தெரியவில்லை. படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பதுதான் முக்கியம்.
முதல் பென்ச்சில் இருப்பவர் நன்றாக படிப்பார், கடைசி பென்ச்சில் இருப்பர் நன்றாக படிக்கமாட்டார் என்று அர்த்தம் அல்ல. அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப்போவதாக வெளிவரும் தகவல் பலர் கிளப்பி விடுவது. 2026ல் திமுக ஆட்சிக்கு வராது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் ஆர்ப்பாட்டம் நடத்தலாம். சிவகங்கை காவல் நிலைய மரணம் மட்டுமின்றி இதுவரை நடந்த அத்தனை காவல்நிலைய மரணங்களுக்கும் சிபிஐ விசாரணை வேண்டும்.
விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பீர்களா, கூட்டணி ஆட்சியா, தனித்த ஆட்சியா என முதல்வர் ஸ்டாலினிடம் கேளுங்கள். திமுகவினர் மக்கள் வெறுக்கும் அளவுக்கு நடந்துகொண்டிருக்கிறார்கள். ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதற்காக நாங்கள் இந்த பயணத்தைத் தொடங்கியுள்ளோம் என்றார்.