கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தின் அரசியல் களமும் கூட்டணி கணக்குகளும் மாறத் தொடங்கி உள்ளன. அதிமுக கூட்டணியில் ஒரு பிரம்மாண்ட கட்சி இணையும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வருகிறார்.. தான் கலந்து கொண்ட கூட்டத்தில் விஜய்யின் தவெக கொடி பறந்த நிலையில் அதிமுக – தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று அவர் தெரிவித்தார்..
இதை தொடர்ந்து அதிமுகவின் மூத்த தலைவர்கள் சிலரும் அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.. மேலும் கரூர் வழக்கு சிபிஐ வசம் சென்றுள்ளதால் விஜய் பாஜக பிடியில் சிக்கி உள்ளதாகவும், அவர் விரைவில் பாஜக – அதிமுக கூட்டணியில் இணைவார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.. இந்த சூழலில் அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கூறி வந்தனர்..
இந்த நிலையில் தவெக உடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ தவெகவுடன் அதிமுகவும், அதிமுக உடன் தவெகவும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை.. கூட்டணி தொடர்பாக தவெகவினர் எங்களுடன் பேசவில்லை, நாங்களும் தவெகவினருடன் பேசவில்லை.. 2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மை உடன் அதிமுக ஆட்சி அமைக்கும்.. எனது கூட்டத்தில் தவெக தொண்டர்கள் கொடி அசைத்ததாலேயே பிள்ளையார் சுழி போடப்பட்டதாக கூறினேன்.
பிள்ளையார் சுழி போடப்பட்டதாக நான் கூறியதில் என்ன தவறு உள்ளது.. தவெக தொண்டர்கள் அவர்களின் கட்சிக் கொடியையே காட்டினர். கூட்டணி குறித்து அந்தந்த கட்சி தலைவர்கள் தான் முடிவு எடுப்பர்..” என்று தெரிவித்தார்..
Read More : “ஓபிஎஸ், தினகரன் திமுகவின் B டீம்.. யார் துரோகம் செய்தாலும் நடவடிக்கை…” இபிஎஸ் அதிரடி அறிவிப்பு..!



