தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் இத்தனை பயன்களா? இது தெரிஞ்சா இனி நீங்களும் மாறிடுவீங்க..!!

Food 2026

நமது முன்னோர்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்த பல வாழ்க்கை முறைகளுக்கு பின்னால் ஆழமான அனுபவ அறிவும், ஆரோக்கியக் கோட்பாடுகளும் நிறைந்துள்ளன. அந்த வகையில், தரையில் அமர்ந்து உணவருந்தும் வழக்கம் வெறும் பாரம்பரிய அடையாளம் மட்டுமல்லாமல், உடலியல் ரீதியாக பல்வேறு நன்மைகளை தரக்கூடியது.


தரையில் சம்மணமிட்டு, சுகாசனம் போன்ற நிலையில் அமர்ந்து சாப்பிடும் போது, முதுகெலும்பு இயல்பாகவே நேராக நிமிர்கிறது. உணவை எடுத்து உண்பதற்காக முன்னும் பின்னும் லேசாக குனியும் அசைவுகள், வயிற்றுப் பகுதித் தசைகளை இயக்கிச் செரிமானப் பணிகளுக்கு தேவையான தூண்டுதலை அளிக்கின்றன. மேலும், நாற்காலியில் அமரும் போது புவிஈர்ப்பு விசையால் ரத்த ஓட்டம் பெரும்பாலும் கால்களை நோக்கிப் பாயும். ஆனால், தரையில் கால்களை மடித்து அமரும் போது கீழ்நோக்கி செல்லும் ரத்த ஓட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, செரிமான மண்டலம் மற்றும் இதயத்தை நோக்கி அதிக அளவில் பாய்கிறது. இதனால் வயிற்றுப் பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, உணவு உடனுக்குடன் ஆற்றலாக மாற்றப்பட உதவுகிறது.

தவிர, தினசரி தரையில் அமர்ந்து எழும் பயிற்சி இடுப்பு எலும்புகள், முழங்கால்கள் மற்றும் முதுகெலும்புத் தசைகளை வலுப்படுத்துகிறது. இது உடலின் நெகிழ்வுத்தன்மையையும் (Flexibility) சமநிலைத் திறனையும் பராமரிப்பதுடன், மூட்டு வலி மற்றும் ஆர்த்தரைடிஸ் போன்ற கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. மேலும், சுக்லாசனம் போன்ற அமைதியான நிலையில் அமர்ந்து உணவருந்துவது கவனச்சிதறல்களைக் குறைத்து, உணவை உணர்ந்து உண்ணும் ‘மைண்ட்ஃபுல் ஈட்டிங்’ (Mindful Eating) முறையை ஊக்குவிக்கிறது. இது அதிகளவில் உண்பதை தவிர்த்து, செரிமான மண்டலத்தை சீராக இயங்கச் செய்கிறது.

அதேவேளையில், தீவிர மூட்டு வலி, முழங்கால் கோளாறுகள் அல்லது வயது முதிர்வு காரணமாக தரையில் அமர இயலாதவர்கள் இதைக் கட்டாயமாக பின்பற்றத் தேவையில்லை என குறிப்பிடப்படுகிறது. நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து, கவனத்துடன் உணவருந்துவதும் ஆரோக்கியமான நடைமுறையே ஆகும். முன்னோர்களின் பழக்கவழக்கங்களில் உள்ள அறிவியல் பூர்வமான நன்மைகளைப் புரிந்து கொண்டு, நமது உடல்நிலைக்கு ஏற்ப அவற்றை பின்பற்றுவதே சிறந்த அணுகுமுறையாகும்.

Read More : தமிழ்நாட்டில் ஆன்லைனில் மது விற்பனையா? உண்மை என்ன? துறை அமைச்சரே கொடுத்த பரபரப்பு தகவல்..!!

Next Post

முருங்கை மரத்தில் பேய் குடியிருக்குமா..? வீட்டில் வளர்க்கலாமா? வேதாள கதையால் வந்த விளைவு..!!

Fri Aug 7 , 2026
கிராமப்புறங்களில் முருங்கை மற்றும் வேப்ப மரங்கள் இல்லாத வீடுகளே இல்லை எனும் நிலை ஒருகாலத்தில் இருந்தது. ஆனால், காலப்போக்கில் பரப்பப்பட்ட மூடநம்பிக்கைகள் காரணமாக பலர் தங்கள் வீடுகளில் இருந்த முருங்கை மரங்களை வெட்டி அகற்றும் சூழல் உருவானது. குறிப்பாக, முருங்கை மரத்தில் பேய், பிசாசுகள் குடியிருக்கும் என்ற அச்சமே இதற்கு காரணம். விண்வெளி ஆராய்ச்சியில் மனித இனம் உச்சம் தொட்டு வரும் இக்காலகட்டத்திலும், பில்லி சூனியம் மற்றும் பேய் சார்ந்த […]
Village 2026

You May Like