குரூப் 4 தேர்வு எழுதுறீங்களா? இந்த புதிய ரூல்ஸை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க! TNPSC முக்கிய அறிவிப்பு!

TNPSC 2026

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆய்வக உதவியாளர், விற்பனை உதவியாளர், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மற்றும் நேர்முக எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 4 நிலையிலான 6,574 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நேற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.


இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தேர்வர்கள் வரும் நவம்பர் 5-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள நவம்பர் 11 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு 2027 ஜனவரி 10-ஆம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு என்ற உரிய முறையான வரிசையில் கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், தட்டச்சர் பணிக்கு உரிய தட்டச்சு சான்றிதழ் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வில் தேர்வர்கள் பெறும் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். தொழில்நுட்பத் தகுதிகளான தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துப் பணிகளுக்கு, கூடுதல் தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருக்கும் பட்சத்தில், வயதில் மூத்தவருக்குத் தரவரிசையில் முதலிடம் அளிக்கப்படும். அத்துடன் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக இடஒதுக்கீட்டு விதிமுறைகள் பின்பற்றப்படும்.

விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படம் தேர்வு அறிவிப்பு வெளியான அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். புகைப்படத்தின் கீழ் தேர்வரின் பெயர் மற்றும் படம் எடுக்கப்பட்ட தேதி தெளிவாக அச்சிடப்பட்டிருப்பதுடன், அதன் டிஜிட்டல் நகலையும் சேமித்து வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழுமையான கல்வித்தகுதி மற்றும் விதிமுறைகளை தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Read More : உலக பாக்ஸ் ஆபீஸ் மகுடத்தை தட்டிச் சென்ற ‘Avengers: Endgame’! ₹28,300 கோடி வசூலித்து மீண்டும் முதலிடம்!

Next Post

ரூ.600 கோடி சொத்தை காட்டியவருக்கு ரூ.30 லட்சம்தான் பிரச்சனையா? ஆடிட்டர் செஞ்ச தப்புக்கு முதல்வர் என்ன பண்ணுவாரு? ஐகோர்ட் சரமாரி கேள்வி!

Wed Oct 7 , 2026
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டன. வேட்புமனுவில் முழுமையான சொத்து விவரங்கள் முறையாகத் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி தொடரப்பட்ட இந்த வழக்குகளை ஆரம்பக் கட்டத்திலேயே நிராகரிக்கக் கோரி, விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு […]
Vijay Court 2026

You May Like