தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் நடந்து வருகிறது, இது இந்த வருடம் மே 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதே போல் புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 15-ந்தேதியும், அசாம் மாநில சட்டசபை மே 20-ந்தேதியும், மேற்கு வங்காள மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே 7-ந்தேதியும், கேரள சட்டசபை மே 23-ந்தேதியும் முடிவடைகிறது. இதன் காரணமாக அசாம், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களிலும் இந்த வருடம் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலையடுத்து
இதனையடுத்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். அதன்படி அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். வாக்கு வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. ஏப்ரல் 7 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் ஏப்ரல் 9ஆம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. ஏப்ரல் 7 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் ஏப்ரல் 9ஆம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. ஏப்ரல் 10ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் ஏப்ரல் 13ஆம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பேசியதாவது, “தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் 17.5 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் நடைபெறும் இந்த 5 மாநிலங்களில் 2.18 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சராசரியாக 700 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மாதிரி நடத்தை விதிகள் (Model Code of Conduct) இன்று மாலை முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதனால் அரசு புதிய திட்டங்களை அறிவிக்கவோ, முக்கிய இடமாற்றங்களைச் செய்யவோ முடியாது.



