அலர்ட்..! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி… 15-ம் தேதி வரை கொட்ட போகும் கனமழை…!

rain 2025 3

வளிமண்டல மேலடுக்கு, கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 15-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் 15-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 26 டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல்13-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். அதேபோல, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடலில் சில பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்

Vignesh

Next Post

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா...? இதை உடனே பண்ணுங்க..!

Sun Aug 10 , 2025
புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி இருந்தால் வீட்டுமனை பட்டா வழங்கப்படும். அதை எப்படி வாங்குவது என்பதை பார்க்கலாம். புறம்போக்கு நிலம் என்பது பொதுவாக அரசுக்கு சொந்தமான நிலம், அது குடியிருப்பு அல்லது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாது. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்குவது என்பது மிகவும் அரிது, ஆனால் சில சந்தர்ப்பங்களில், அரசு சிறப்பு திட்டங்கள் மூலம் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கலாம். புறம்போக்கு நிலம் என்பது அரசுக்கு சொந்தமான நிலம், […]
patta 2025

You May Like