வளிமண்டல மேலடுக்கு சுழற்சி… உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி…! வானிலை மையம் எச்சரிக்கை…!

cyclone rain 2025

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்; வடக்கு ஆந்திர – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா மற்றும் அதையொட்டிய வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் கடந்து செல்லக்கூடும்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் தாக்கத்தால் இன்றும், நாளையும் தமிழகத்தின் ஒரிரு இடங்களில், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இதேபோல், அதிகபட்ச வெப்பநிலை 37.4 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கக் கூடும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மர்றும் அதையொட்டிய குமரிக் கடல், ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு – வடமேற்கு வங்கக் கடல், தென்மேற்கு வங்கக் கடலின் சில பகுதிகள், தென்மேற்கு – மத்திய மேற்கு அரபிக் கடலின் சில பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

முந்திரி உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி...! வாரியம் அமைத்து தமிழக அரசு உத்தரவு...!

Sat Sep 13 , 2025
தமிழகத்தில் முந்திரி உற்பத்தியை அதிகரித்து அந்த தொழிலை மேம்படுத்த தமிழ்நாடு முந்திரி வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்: முந்திரி உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரிசார் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கவும் ரூ.10 கோடியில் தமிழ்நாடு முந்திரி வாரியம் ஏற்படுத்தப்படும் என்று 2025-26-ம்ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதை செயல்படுத்தும் விதமாக மாநில […]
tn govt 20251 1

You May Like