Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி… மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை…!

rain 1

தமிழகத்தில் இன்று முதல் 12-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச.8 முதல் 12-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் டிச.8 முதல் 12-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த புதிய சட்டம்...! மத்திய அரசு தகவல்...!

Sun Dec 7 , 2025
இந்தியாவின் சுரங்கத் துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமான மூலப்பொருட்கள், ஏற்றுமதி ஆகியவை அரசுக்கு வருவாயை வழங்குகிறது. இந்தியப் பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சியுடன், கனிம, சுரங்க வளங்களுக்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.சுரங்கத் தொழிலாளர்களின் உடல்நலம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக அரசு வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அண்மைக் காலம் வரை, சுரங்கச் சட்டம்- 1952, அது தொடர்புடைய விதிமுறைகள் ஆகியவற்றின் […]
Central 2025

You May Like