விழுப்புரம் அருகே மரகதபுரத்தைச் சேர்ந்த சங்கர் (45) கூலி தொழிலாளி. அவருடன் சரத்குமார் (39) என்றவர் நண்பராக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு மரகதபுரம் வாய்க்கால் மேடு பகுதியில் சங்கர் படுகாயம் அடைத்து கிடப்பதை உள்ளூர் மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அங்கு சென்ற போலீசார், ரத்தக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சங்கரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அப்போது அவரது மர்ம உறுப்பு சேதப்படுத்தப்பட்டு, வலது கண் தோண்டி எடுக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
விசாரணையில், சங்கர் தனது மனைவி அஞ்சுலட்சமியை விட்டு பிரிந்து, மரகதபுரத்தை சேர்ந்த பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. ஒரு கட்டத்தில் அந்த பெண் சங்கரை கழட்டிவிட்டு சங்கரின் நெருங்கிய நண்பரான அன்பு உடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் சங்கர், கள்ளக்காதலியிடம் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் எரிச்சலடைந்த பெண், “சங்கர் என்னை டார்ச்சர் செய்கிறான்” என்று அன்புவிடம் புகார் கூறியுள்ளார்.இதையடுத்து, மதுபோதையில் அன்பு சங்கரிடம் விவாதம் செய்து, கோபத்தின் உச்சத்தில் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சங்கரின் மனைவி அஞ்சுலட்சம் அளித்த புகாரின் பேரில், போலீசார் அன்பு மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர். அதேசமயம், கள்ளக்காதலியிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தற்போது சங்கர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Read more: இந்த மாணவர்களின் தகவலை அக். 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்…! பள்ளி கல்வித்துறை உத்தரவு…!