மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. அகவிலைப்படி உயர்வு எப்போது வழங்கப்படும்..?

ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது..

central govt employees

இதனிடையே ஹோலி பண்டிகையின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அரசு அறிவிக்கலாம் என்று தகவல் வெளியானது.. ஆனால் ஹோலி பண்டிகை முடிந்துவிட்ட நிலையில் அகவிலைப்படி உயர்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை… இந்த சூழலில், அகவிலைப்படி (டிஏ) உயர்வு குறித்து முடிவெடுக்க இன்று (15.03.2023) அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது இன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மத்திய அரசு, இன்றே அந்த அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு இந்த ஆண்டு 3 சதவீதமாக இருக்கும் என்றும், இதனால் அவர்களின் அகவிலைப்படி 38 முதல் 41 சதவீதமாக உயரும் என்றும் கூறப்படுகிறது..

7வது ஊதியக் குழுவின் கீழ் வரும் இன்று அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்கள் மார்ச் 31, 2023 முதல் உயர்த்தப்பட்ட சம்பளத்தைப் பெறலாம். இது தவிர, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

RUPA

Next Post

சர்க்கரை அளவு, உடல் எடையை குறைக்க!... தினமும் 28 கிராம் கொண்டைக்கடலை சாப்பிடுங்கள்!...

Wed Mar 15 , 2023
உடல் எடை மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுபடுத்த தினமும் 28 கிராம் கொண்டைக்கடலையை சாப்பிட்டு வந்தால் குறுகிய காலத்தில் நல்ல தீர்வு கிடைக்கும். இன்றைய வாழ்க்கை மற்றும் உணவு பழக்க முறையால், உடல் எடை அதிகரிப்பது மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவது தற்போது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. மேலும் நமது உடல் எடையைக் குறைப்பதற்காக மக்கள் ஜிம்மில் பல மணிநேரம் பல வித உடற்பயிற்சிகள் உள்ளிட்ட […]
How to Cook Chickpeas Step 3 1200

You May Like