வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! ஹோட்டல்களில் இனி இந்த வசதி கிடையாது..!! தமிழ்நாடு அரசு அதிரடி தடை..!!

பொதுவாக சில உணவகங்களில் புகைக்கும் அறை என்று தனியாக இருக்கும். அதாவது புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் புகைக்க வசதியாக இந்த அறை அமைக்கப்பட்டிருக்கும். சிலரால் சாப்பிடும் போது புகைபிடிக்காமல் இருக்க முடியாது. புகைத்துக்கொண்டே சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். இதன் மூலம் புகை பிடிக்கும் விரும்பும் நபர்கள் தனியாக புகைக்கலாம்.

அதேபோல் புகைபிடிக்க விரும்பாத நபர்களுக்கும் இதனால் தொல்லை இருக்காது. தனியாக புகைக்க விரும்பும் நபர்கள் அறையில் இருப்பார்கள். மற்ற பொதுமக்கள் பொது அறையில் இருப்பார்கள். புகை, இருமல் போன்ற பிரச்சனைகள் எதுவும் இருக்காது. ஆனால் இது புகைபிடிப்பதை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கை ஆகும். இப்போதெல்லாம் பல உணவகங்களில் இது போல புகைக்கும் அறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதிக அளவில் கஸ்டமர்கள் வர வேண்டும் என்பதற்காக இதுபோன்ற அறைகள் அமைக்கப்பட்டுவதாக கூறப்படுகிறது. ஆனால், புகைபிடிக்கும் பழக்கம் காரணமாக தீ விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகளும் கூட உள்ளன. இந்நிலையில் தான், உணவகங்களில் புகைக்கும் அறை (Smoking Room) அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி, உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைபிடிப்பதற்காக அறை திறக்கக் கூடாது. விதிகளை மீறி புகைக்குழல் கூடம் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஓராண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை மற்றும் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

திருமணம் செய்து கொள்வதாக பல ஆண்களிடம் ஆசை வார்த்தை கூறி…….! ஏமாற்றிய பெண்ணுக்கு காவல்துறை வலைவீச்சு…….!

Fri Aug 4 , 2023
சென்னை அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, மருத்துவர்கள் முதல், தொழிலதிபர்கள் வரையில் பலரை ஏமாற்றிய ஒரு பெண் மீது காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர் தலைமறைவாகி இருக்கிறார். காவல்துறையினர் இந்த புகார் பற்றி நடத்திய அதிரடி விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் மஞ்சுளா என்று தெரியவந்துள்ளது. ஆனால் இந்த விவகாரம் சென்னை மாவட்ட காவல்துறையினருக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் தான், […]

You May Like