ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள் கவனத்திற்கு… நாளை தான் கடைசி…! உடனே இதை செய்து முடிக்க வேண்டும்…!

money Pension 2025

தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு நாளை கடைசி நாளாகும்.


தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு நாளை நாளாகும். இது குறித்து நிதிச் சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் அனைத்துத் தகுதியுடைய ஊழியர்களும் கடைசிநேர சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் விரைவில் இணையுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தக் கடைசி நாளுக்குப் பிறகு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற முடியாது.

மேலும், ஏற்கனவே ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள மத்திய அரசு ஊழியர்கள், சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் மீண்டும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு ஒருமுறை அனுமதிக்கப்படுவார்கள் என்று நிதிச் சேவைகள் துறை தெரிவித்துள்ளது. குறைந்தது ஓய்வு பெறுவதற்கு ஓராண்டு முன்பாகவோ அல்லது தன்விருப்ப ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவோ இதில் எது முதலில் நிகழ்கிறதோ அப்போது மாறவேண்டும்.

பணியிலிருந்து நீக்கப்படுதல் அல்லது அபராதமாக கட்டாய ஓய்வளித்தல் அல்லது ஒழுங்குமுறை நடவடிக்கைகள் நடைபெறுதல் ஆகிய நிகழ்வுகளில் ஓய்வூதியத் திட்டத்தை மாற்றிக் கொள்வதற்கான வசதி அனுமதிக்கப்பட மாட்டாது. குறிப்பிட்ட நாளுக்குள் ஓய்வூதியத் திட்டத்தை மாற்றிக் கொள்ள விரும்பாதவர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் தொடர்வார்கள். தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கும் ஊழியர்கள் 2025 செப்டம்பர் 30-க்கு பிறகு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை தேர்ந்தெடுக்க முடியாது.

Vignesh

Next Post

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு முதல் பதக்கம்!. ஷைலேஷ் குமார் தங்கம் வென்று அசத்தல்!

Mon Sep 29 , 2025
2025 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் பீகாரைச் சேர்ந்த ஷைலேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் ஆண்களுக்கான T63/42 உயரம் தாண்டுதல் போட்டியில் பீகாரின் சைலேஷ் குமார் வரலாறு படைத்தார். சைலேஷ் 1.91 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்று, புதிய சாம்பியன்ஷிப் சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் […]
World Para Athletics Championships

You May Like