தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு…! ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் மாற்றம்…! முழு விவரம்

tn Govt subcidy 2025

களஞ்சியம் ஆப் மூலம் ஊதியம் அல்லாத பிற நிதிகளை பெறுவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து நிதியை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் என 13 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். அரசு பணிகள் திறம்பட நடப்பதற்கு தற்போது ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்., என்ற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டம் என்ற சாப்ட்வேர் பயன்பாட்டில் உள்ளது. அரசு சம்பளம் பெறுவோருக்கு இந்த சாப்ட்வேர் மூலம் தான் தற்போது வழங்கப்படுகிறது. இதுதவிர கல்வித்துறையில் மாணவர்கள், ஆசிரியர், பள்ளிகளின் முழு விவரங்கள் கொண்ட ‘எமிஸ்’ என்ற இணையதளம் பயன்பாட்டில் உள்ளது.

தற்போது ஒருங்கிணைந்த நிதி மனிதவள மேம்பாட்டு வலைத்தளம், எதிர்கால தேவை கருதி தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணிப் பலன்களை பெறுவதை எளிமையாக்கும் வகையில் ‘களஞ்சியம்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. விடுப்பு, சரண்டர் விடுப்பு, பே சிலிப் பதிவிறக்கம், பி.எப்., டிரான்ஸ்பர் ஜாயினிங் என்ட்ரி, இ- எஸ்.ஆர்., ஓய்வூதியத்திற்கு முந்தைய பரிந்துரை, இ சலான் உள்ளிட்ட பணப் பலன்கள் நிலரவம், மருத்துவ காப்பீடு விவரம் என அனைத்து விவரங்களும் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளன.

பணியில் உள்ள அலுவலர்கள், ஓய்வூதியர்களுக்கு என தனித்தனியே யூசர் நேம், பாஸ்வேர்டு வழங்கப்பட்டு, பணிசார்ந்த செயல்பாடுகளை அரசு ஊழியர்களே மேற்கொள்ளும் வகையிலும், அதற்கான அனுமதி அதிகாரிகள் வழங்கும் வகையிலும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. களஞ்சியம் ஆப் மூலம் ஊதியம் அல்லாத பிற நிதிகளை பெறுவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து நிதியை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Read more: 350 ராணிகள், 88 குழந்தைகளுடன் வாழ்ந்த மன்னர்!. கிரிக்கெட் வீரர்; விமானம் வாங்கிய முதல் இந்தியர்!. பல ரெக்கார்டுகளுக்கு சொந்தக்காரர்!.

Vignesh

Next Post

Rain: இன்று இந்த 11 மாவட்டத்தில் கனமழை...! வானிலை கொடுத்த எச்சரிக்கை...!

Thu Jul 17 , 2025
நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக […]
rain

You May Like