இந்தியாவில் வேலையின்மை கடந்த 6 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக, வருடாந்திர தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின் (PLFS – Periodic Labour Force Survey) சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. 2017–18-ல் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் வேலைஇல்லா விகிதம் 6% ஆக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. 2023–24-க்குள் இது 3.2% ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம், நாட்டின் தொழில்சந்தை அமைப்பில் அடிப்படை மாற்றங்கள், மேம்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அரசு கருதுகிறது. […]
குவைத்திலிருந்து வந்த இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இன்று குவைத்திலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு மிரட்டல் செய்தி வந்ததை அடுத்து, விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹைதராபாத் விமான நிலையத்திற்கு விரிவான மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த எச்சரிக்கையின் பேரில், விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது, […]
மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் படி, ஆப்பிள், சாம்சங், விவோ, ஓப்போ போன்ற அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தாங்கள் விற்பனை செய்யும் புதிய மொபைல்களில் அரசு உருவாக்கிய “Sanchar Sathi” என்ற சைபர் பாதுகாப்பு செயலியை கட்டாயமாக முன்பே நிறுவி வைக்க வேண்டும். இந்த உத்தரவை 90 நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. செயலியை (Sanchar Sathi) […]
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் […]
In Chennai today, the price of gold per sovereign fell by Rs. 240 to Rs. 96,560.
சென்னை அருகே கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. கடந்த 30-ம் தேதி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் -புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் நகரும் என்று வலுகுறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் இது நகராமல் சென்னை கடற்கரை பகுதியிலேயே […]
வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் இன்று அதிகாலை முதலே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. கடந்த 2 நாட்களாக சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் பெரிதாக மழை பெய்யவில்லை.. ஆனால் இன்று சென்னைக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று காலை முதலே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. மாலையில் சற்று மழை ஓய்ந்திருந்த […]
உங்கள் வீட்டிற்கு ஒரு புதிய டிவி வாங்க விரும்புகிறீர்களா? அது ஸ்மார்ட் டிவியாகவும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? ஆம் எனில்.. பிரபலமான இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டில் குறைந்த விலையில் ஒரு நல்ல டிவியை நீங்கள் வாங்கலாம். மிகப்பெரிய தள்ளுபடி உள்ளது. சலுகை என்ன? டிவி அம்சங்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. BESTON நிறுவனத்தின் புதிய 32-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2025 பதிப்பு […]
இந்தியா முழுவதும் பல முக்கிய விமான நிலையங்களில் GPS ஏமாற்று வேலையால் (GPS Spoofing) மற்றும் GNSS குறுக்கீடு பிரச்சினைகள் நடந்துவருகின்றன என்று மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, ராஜ்யசபாவில் பேசிய போது “ நவம்பர் 2023 முதல், DGCA (விமானப் போக்குவரத்து பொதுத் துறை இயக்ககம்) GPS ஏமாற்று வேலை அல்லது குறுக்கீடு சம்பவங்களை கட்டாயமாக […]
மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.. மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபம் அருகில் உள்ள மண்டபத்தின் மேல் சுப்பிரமணிய சுவாமி சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.. மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கமாகும்.. ஆனால் 2-ம் உலகப் போரின் போது பாதுகாப்பு காரணமாக ஆங்கிலேய […]

