மனைவியின் உடை அல்லது சமையல் திறன் குறித்த கருத்துக்கள் கடுமையான கொடுமை அல்லது துன்புறுத்தலாகாது என்று குறிப்பிட்ட மும்பை உயர்நீதிமன்றம், ஒரு கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்கு மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளை நேற்று ரத்து செய்தது. 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.. இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் ஔரங்காபாத் கிளையில் நீதிபதிகள் […]

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில், சிஹோரா தாலுகாவில் உள்ள பேலா மற்றும் பினைகா கிராமங்களுக்கு இடையில், தங்கப் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. கடந்த சில மாதங்களாகவே, நிபுணர்கள் அந்தப் பகுதியில் மண் மாதிரிகளைத் தோண்டி சோதனை செய்து வந்தனர். இந்த நிலையில், அங்கு சிறிய தங்கத் துகள்கள் மற்றும் உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். முதற்கட்ட கணக்கெடுப்பு தரவுகளின்படி, தங்கப் படிவுகள் சுமார் 100 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ளன, மேலும் இந்த […]

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.200 குறைந்து ரூ.75,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து […]

ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான ஆபரேஷன் அகல் 9வது நாளை எட்டி உள்ளது.. இந்த நிலையில் நேற்றிரவு முழுவதும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் இன்று தெரிவித்துள்ளது. இந்த மோதலில் 4 வீரர்கள் காயமடைந்தனர், அவர்களில் இருவர் வீர மரணம் அடைந்தனர்.. எல்/என்கே பிரித்பால் சிங் மற்றும் செப் ஹர்மிந்தர் சிங் என்ற 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக ராணுவம் […]

இன்றைய அதி நவீன டிஜிட்டல் யுகத்தில் இண்டர்நெட் நம் வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் எங்காவது செல்ல வேண்டியிருக்கும் போது அல்லது எதை பற்றியாவது தெரிந்து கொள்ள வேண்டுமெனில் உடனடியாக கூகுளை நாடுகிறோம். நமது ஸ்மார்ட்போன்களில் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பயன்பாடுகள் இணைய வசதியை அடிப்படையாகக் கொண்டவை. இந்தியா மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான நாடுகள் இண்டர்நெட்டை பயன்படுத்துகிறது. உலகம் முழுவதும் இண்டர்நெட் பயன்பாட்டில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. […]

உலகளவில் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து பணி நீக்கங்களை அறிவித்து வருகின்றன.. குறிப்பாக கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.. அந்த வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ரெட்மண்ட் வளாகத்தில் சில ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதனால் மே 2025 முதல் வாஷிங்டன் பகுதியில் மட்டும் மொத்த வேலை இழப்புகளின் எண்ணிக்கை 3,160 ஆக உயர்ந்துள்ளது. நிறுவனத்தில் […]

ஜோதிடத்தின்படி, குரு மற்றும் சுக்கிரன் மேஷ ராசியின் மூன்றாவது வீட்டில் சஞ்சரிப்பதாலும், குரு 7-வது வீட்டைப் பார்ப்பதாலும், சில ராசிக்காரர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. சிறிது முயற்சி செய்தால், நல்ல திருமண வாழ்க்கை அமையும். மணமகன் அல்லது மணமகள் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். திருமண ஏற்பாடுகளைத் தொடங்கவும் இது ஒரு நல்ல நேரம். ரிஷபம் ரிஷப ராசியில் குரு மற்றும் சுக்கிரனின் சுப யோகம் காரணமாக, இந்த […]