ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் முடிவை இந்தியா இன்று மீண்டும் ஒருமுறை ஆதரித்து, “நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் ” இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் நிலையான முன்னுரிமையாக இருந்து வருவதாக தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி விரைவில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக தனக்கு உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த தகவலை தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவின் எண்ணெயை இந்தியா வாங்காது என்ற தெரிவித்ததை தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி பிரதமர் டிரம்ப் மற்றும் அமெரிக்காவைப் பார்த்து பயப்படுவதாகக் குற்றம் சாட்டினார். மேலும் அவரின் பதிவில் “ பிரதமர் மோடி டிரம்பைப் பார்த்து பயப்படுகிறார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவரது கருத்துக்களுக்கு முரணாக […]

கூகுளின் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப் (YouTube), இன்று காலை ஒரு பெரிய உலகளாவிய செயலிழப்பை சந்தித்தது, இது மில்லியன் கணக்கான பயனர்களைப் பாதித்தது. காலை 5:23 மணியளவில் (IST) 340,000 க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டதாக டவுன்டெக்டர் தெரிவித்துள்ளது. இது சமீபத்திய மாதங்களில் சேவைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இடையூறுகளில் ஒன்றாகும். இந்தப் பிரச்சினை இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் ஒரே நேரத்தில் பயனர்களைப் […]

வீடுகளின் பால்கனிகள், ஜன்னல் ஓரங்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் புறாக்கள் அமர்ந்திருப்பதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம்… பலர் அவற்றை அதிர்ஷ்ட அறிகுறிகளாகக் கருதுகிறார்கள்.. மேலும் அவற்றை அதிகம் கவனிப்பதில்லை. ஆனால் சுகாதார நிபுணர்கள் வேறுவிதமாக எச்சரிக்கின்றனர். வீட்டிற்குள் அல்லது அதைச் சுற்றி புறா எச்சம் இருப்பது வீட்டில் வசிப்பவர்களுக்கு கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். புறா எச்சம் அதிக அளவு அம்மோனியாவைக் கொண்டுள்ளது என்று நிபுணர்கள் […]

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.. 4 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் முதல் நாளான நேற்று மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன், நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. […]

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. […]

EPFO சந்தாதாரர்களுக்கு 100 சதவீத பணம் திரும்பப் பெறுதல் என்ற நல்ல செய்தியை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.. ஆனால் அதே நேரம் ஒரு அதிர்ச்சி செய்தியையும் அரசாங்கம் அளித்துள்ளது. ஆம்.. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள் தங்கள் PF (Provident Fund) தொகையை முழுமையாக எடுக்க இப்போது 12 மாத வேலையின்மையை முடிக்க வேண்டும். அதாவது, ஒருவர் வேலையை இழந்த ஒரு வருடத்திற்குப் பிறகுதான் […]

சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் செருப்பு வீச முயன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இதையடுத்து ராகேஷ் கிஷோரை உடனடியாக நீக்கி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (SCBA) உத்தரவிட்ட.. மேலும் அவரின் நுழைவுச் சீட்டை ரத்து செய்து, உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய தடை விதித்தது. இந்த நிலையில் மற்றொரு நீதிபதி மீது செருப்பு வீசிய சம்பவம் அரங்கேறி […]