கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
அமெரிக்காவின் கிழக்குப் பகுதியின் மூன்றில் இரண்டு பங்கை ஒரு பெரும் பனிப்புயல் சூழ்ந்துள்ளது. இது நியூ மெக்சிகோ முதல் நியூ இங்கிலாந்து வரை சுமார் 2,000 மைல் பரப்பளவில் கனமழை, உறைபனி, பனி குவிப்பு மற்றும் உயிருக்கு ஆபத்தான குளிரை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 213 மில்லியன் மக்களைப் பாதித்துள்ள இந்தப் புயல் காரணமாக, 8,50,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்படுள்ளது.. 14,000-க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் […]
ராஜஸ்தானின் நாகூரில் ஒரு 58 வயது நபரின் வீட்டிலிருந்து 9,550 கிலோ அம்மோனியம் நைட்ரேட்டை பறிமுதல் செய்ததையடுத்து, அவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. நாகூர் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) மிருதுல் கச்வா இதுகுறித்து பேசிய போது “ எங்களுக்கு கிடைத்த சில ரகசியத் தகவல்களின் அடிப்படையில், நாகூர் காவல்துறையின் ஒரு சிறப்புப் படை, ஞாயிற்றுக்கிழமை நாகூரின் தான்வ்லாவில் உள்ள குற்றவாளி சுலைமான் கானின் வீட்டில் சோதனை […]
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது என்பது நாம் அறிந்ததே. பள்ளிகள், அரசு அலுவலகங்களில் கொடியேற்றுவதும், இனிப்புகள் வழங்குவதும் வழக்கம். ஆனால், இப்போது குடியரசு தினத்தைப் பற்றி பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.. ஜனவரி 26 என்பது ஏதேனும் ஒரு தற்செயலான தேதி அல்ல. 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் “முழுமையான சுயராஜ்யம்” அதாவது […]
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), தனது ஐஎம்பிஎஸ் (உடனடிப் பணப் பரிமாற்ற சேவை) பரிவர்த்தனை விதிகளை மாற்றியுள்ளது. இது பிப்ரவரி 15, 2026 முதல் நடைமுறைக்கு வரும். இதுவரையில், இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், யோனோ செயலி மூலம் ஐஎம்பிஎஸ் வழியாக ரூ.5 லட்சம் வரை ஆன்லைன் பணப் பரிமாற்றங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கி வந்தது. இருப்பினும், இந்த வசதியில் தற்போது ஒரு […]
149 மில்லியன் (14.9 கோடி) தனித்துவமான லாகின் விவரங்களும் (logins) பாஸ்வேர்டுகளும் வெளியே கசிந்துள்ளதாக ஒரு மாபெரும் இணையப் பாதுகாப்புச் சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது. இது எந்த ஹேக்கரின் திட்டமிட்ட தாக்குதல் அல்ல. மாறாக, சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஜெரிமையா ஃபௌலர் (Jeremiah Fowler) 149,404,754 தனித்துவமான லாகின் மற்றும் பாஸ்வேர்டுகள் அடங்கிய, சுமார் 96 GB அளவுள்ள மூல தரவு எந்தவிதமான பாஸ்வேர்டு பாதுகாப்பும் அல்லது குறியாக்கமும் (encryption) இல்லாமல் […]
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த எம்.பி தர்மர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தர்மர் முறைப்படி அதிமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் ஆதரவால் எம்.பி பதவி பெற்ற தர்மர் அவருடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.. ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளர்கள் பலரும் திமுகவுக்கு சென்ற நிலையில் தர்மர் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்தவர் தர்மர். […]
கலபுரகிக்கு அருகிலுள்ள ஆசாத்நகர் கிராமத்தில் புதிதாகத் திருமணமான அனுசுயா அவினாஷ் ஆகாடே என்ற பெண் தற்கொலை செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு கிராம வாழ்க்கையுடன் பழகிக்கொள்ள அவர் சிரமப்பட்டதாகவும், நகர வாழ்க்கையை விரும்பியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் பெங்களூரில் பணிபுரிந்த ஒரு பி.எஸ்சி பட்டதாரி ஆவார். கலபுரகி நகரின் புறநகரில் உள்ள ஆசாத்நகர் கிராமத்தில் 26 வயதுடைய புதிதாகத் திருமணமான பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் […]
பெரம்பலூரில் போலீசார் முன்னிலையில் ரவுடி வெள்ளைக்காளை என்பவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் சென்னை அழைத்து வந்து கொண்டிருந்தனர்.. சென்னையில் இருந்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.. அப்போது பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு இறையூர் என்ற இடத்தில் உணவருந்திக் கொண்டிருந்த போது 10 பேர் கொண்ட கும்பல் நாட்டு […]
பெண் ஊழியர்களின் மூன்றாவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் மங்கையர்கரசி என்பார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மூன்றாவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது என்பதை உயர்நீதிமன்றம் சுட்டிகாட்டியது.. மேலும் பேறுகால விடுப்புக்கோரி வழக்குகள் வராதவகையில் அனைத்து மாவட்ட நீதிமன்ற பதிவாளர்கள், அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை […]

