கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூடுதலாக மூன்று விதிவிலக்குகளை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை. நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்ப பெண்களும், பிற ஓய்வூதத் திட்டங்களை ஓய்வூதியம் பெறுவோரும் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு உத்தரவு. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு […]

மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள கல்வி நிலைய கட்டிடங்களை வரன்முறை படுத்த கால அவகாசத்தை நீட்டித்து அரசு உத்தரவு. தமிழகத்தில், 2011க்கு முன் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த திட்டம், 2020 பிப்., 18ல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு, ஆறு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் பெறப்பட்ட மனுக்கள், பல்வேறு நிலைகளில் பரிசீலனையில் உள்ளன. மீண்டும், ஆறு மாதம் அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. […]

சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி” 10.07.2025 முதல் 14.07.2025 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி” 10.07.2025 முதல் 14.07.2025 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இப்பயிற்சி, […]

வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய முழுவதும் வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட இருப்பதாக மத்திய அரசின் நீர்வளத்துறை தெரிவித்திருக்கிறது. நிலத்தடி நீரை பயன்படுத்தும் உழவர்கள் அனுபவித்து வரும் துயரங்களையும், நெருக்கடிகளையும் புரிந்து கொள்ளாமல் இப்படி ஒரு […]

ஸ்கேன் செய்து பாலினத்தை கண்டறிந்து பெண் சிசுவை கலைக்க முயன்றதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1971ம் ஆண்டின் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தில் திருத்த மசோதாவை கடந்த 2020-ம் ஆண்டு மத்திய கொண்டு வந்தது. 20 வார காலம் உள்ள கருவைக் கலைப்பதற்கு சேவை வழங்குவோர் ஒருவரின் கருத்து தேவை மற்றும் 20 முதல் 24 வாரம் வரையுள்ள கருவைக் கலைப்பதற்கு […]

சேலம் மாவட்டத்தில் 50% மானியத்தில் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 2025-26ஆம் நிதியாண்டில் நாட்டுக்கோழி வளர்ப்பில் திறன் வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்த மாவட்டம் ஒன்றுக்கு திறமையும் ஆர்வமும் உள்ள 10 பயனாளிகளை தேர்வு செய்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன் பெற விருப்பமுள்ள பயனாளிகள் […]

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1 முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாறுதல் கோரி விண்ணப்பித்த அனைத்து வகை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் ஜூன் 28-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதில் திருத்தம் இருப்பின் ஜூன் 29-ம் தேதி முறையிடலாம். அதன்பின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 30-ம் தேதி வெளியாகும். தொடர்ந்து அனைத்து விதமான ஆசிரியர்களுக்கான பொது […]

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் ஜூன் 30-ம் தேதி மதியம் வெளியிடப்படுகிறது. அதன் விவரங்களை மாணவர்கள் தேர்வுத் துறையின் […]

மாணவர்களின் சாதியை வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் குறிப்பிடக் கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் சாதிப் பெயர்களை ரகசியமாக ஆசிரியர்கள் வைக்க வேண்டும். மாணவர்களின் சாதியை வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் குறிப்பிடக் கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களின் சாதி பெயரை மறைமுகமாக கூட அடைப்புக்குறிக்குள் குறிப்பிடக் கூடாது. சாதியை வெளிப்படுத்தும் வகையில் கைகளில் மாணவர்கள் பட்டைகள் அணிய தடை. சாதிய குறியீடுகளை வெளிப்படுத்தும் வகையில் சைக்கிளில் […]

அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களது குழந்தைகளின் உயர் கல்வி பயில்வதற்கான முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ.1,00,000, கலை மற்றும் அறிவியல் கல்விக்கு ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள் உயர் கல்வி பயிலும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டில் இருந்து உயர்த்தப்படவுள்ளது. தமிழக அரசுப் குழந்தைகள் பணியாளர்களின் கல்வியில் உயர் சேர்வதற்கான முன்பணத்தை அரசு வழங்கி வருகின்றது. அதில், […]