மதுரை மாவட்டத்தில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மதுரை நகரில், குழாய் பதிக்கும் பணியில் மூன்று பணியாளர்கள் ஈடுபட்டிருந்தபோது அதே இடத்தின் வழியாக செல்லும் குடிநீர் குழாய் வெடித்ததால் அவர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த இடம் நிலத்தில் புதைந்துள்ளது. இச்சம்பவத்தில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சக்திவேல் (வயது 30) […]
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில்; 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான தேர்வின்போது எழுத்து […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 625 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை எதுவும் பதிவாகவில்லை. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,553 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் […]
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Director RSETI பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் போது ரூ.25,000 ஊதியம் […]
ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தப்படுவதாக இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகத்திற்கு வந்த புகாரை அடுத்து, பிஐஎஸ் அதிகாரிகள் குழு ஓசூர் அருகே கோவிந்த அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபாலாஜி கெபாசிட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தி மோட்டார் மின்தேக்கிகள் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுமார் 155 எண்ணிக்கையிலான மாற்று மின்னோட்ட மோட்டார் மின்தேக்கிகள் (Capacitors) […]
தமிழகத்தில் வரும் 11-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்குத்திசையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை […]
சேலம் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி பெறும் விவசாயிகள் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்க அஞ்சலகங்களை அணுகி பயன்பெறலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், தனது செய்தி குறிப்பில் மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டொன்டிற்கு ரூ.6,000, வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் 3 தவணையாக ரூ.2,000/- வீதம் இந்த […]
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் மற்றும் நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை எனத் தீர்ப்பளித்துள்ளனர். இந்த நிலையில் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டின் சட்டத்தை உறுதி செய்து வெளிவந்துள்ள உச்சநீதி மன்ற தீர்ப்பு சமூக நீதிக்கான நூற்றாண்டு கால் போராட்டத்தில் பெரும் பின்னடைவு என்று தமிழகத்தில் உள்ள […]
பஞ்சாயத்துத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நவம்பர் 9 மற்றும் நவம்பர் 12, 2022 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவின் பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் நவம்பர் 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில்; அம்பாலா, சர்க்கி தாத்ரி, குருகிராம், கர்னால், குருக்ஷேத்ரா, ரேவாரி, ரோஹ்தக், சிர்சா, சோனிபட் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள […]
சேலம் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்விநிலையங்களில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ,மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் […]