அரசு பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்க துணைக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பணியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில்‌ 4% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசால்‌ வழிகாட்டு நெறிமுறைகள்‌’ வெளியிடப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்றம்‌ மற்றும்‌ மதுரை உயர்நீதிமன்ற கிளையில்‌ அரசுப்‌ பணி பதவி உயர்வுகளில்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கக்‌ கோரி வழக்குகள்‌ தொடரப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட அலுவலர்களைக்‌ […]

டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளதால் பள்ளிகள் திறப்பது தொடர்பாக இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தலைநகரில் ஜிஆர்ஏபி ஸ்டேஜ் 4 நடவடிக்கைகளை மத்திய அரசு நீக்கியதால் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டது. டெல்லியில் காற்றின் தரம் ‘கடுமையானது’ என்பதில் இருந்து ‘மிகவும் மோசமான’ வகைக்கு மேம்பட்டதால், ஆரம்பப் பள்ளிகளை மூடுவது உட்பட நகரத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படலாம். இது தொடர்பாக மாநிலத்தின் […]

Hero Motocorp லிமிடெட் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Sales Manager பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்தில் பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் எதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் ஏற்கனவே பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் […]

சித்ராங் சூறாவளி புயலால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கதேசத்தை தாக்கிய வெப்பமண்டல புயலான சித்ராங் சூறாவளி புயலால் இதுவரை குறைந்தது 13 உயிரிழந்துள்ளனர். இதில் குறைந்தது 8 பேர் வேரோடு பிடுங்கப்பட்ட மரங்கள் விழுந்த பின்னர் உயிரிழந்தனர், இருப்பினும் மற்றவர்கள் இடிந்து விழுந்த கட்டிடங்கள் அல்லது நீரில் மூழ்கி இறந்தனர். அசாமின் நாகோன் மாவட்டத்தில் கனமழை மற்றும் புயலை ஏற்படுத்திய சித்ராங் சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமடைந்தன. திங்கள்கிழமை […]

தமிழகத்தில் பயிர்களை உற்பத்தியை பெருக்குவதற்கு மட்டுமல்லாது, இயற்கைச் சீற்றங்களினால் பயிர் பாதிப்பு ஏற்பட்டாலும், தமிழ்நாடு வேளாண் பெருமக்களை பாதுகாக்க, தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 15-ம் தேதி என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், […]

வங்கக்கடல் பகுதியில் 9-ம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 9-ம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வட மேற்கு திசையில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரக்கூடும். குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி […]

தமிழகம் முழுவதும் 6144 போலீசாரை ஒரே நேரத்தில் பணியிடம் மாற்றம் செய்து சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு. இது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு தனது உத்தரவில்; தமிழகத்தின் ஆறாயிரத்து, நூற்று நாற்பத்து நான்கு (6144) காவலர்கள் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு TSP பட்டாலியன்களின் சிறப்புக் காவலர்கள் மாற்றப்பட்டு, நகரங்கள் / மாவட்டங்களில் உள்ள ஆயுதப் பாதுகாப்புப் பகுதிக்கு அனுப்பப்படுகின்றனர். ஹவில்தார்கள், நாயக்கர்கள் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள்கள் TSP பட்டாலியன்களில் இருந்து […]

நாடு முழுவதும் நாளை மறுநாள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 8-ம் தேதி குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு 11 மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி திரிபுரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, சிக்கிம், அசாம், மணிப்பூர், கேரளா, கோவா, பீகார், மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குருநானக் ஜெயந்தி, குர்புரப் என்றும் அழைக்கப்படுகிறது, இது சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மிக முக்கியமான பண்டிகையாகும். முதல் […]

சென்னையில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் நேற்று வரை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30,699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் 12,625 வழக்குகளுக்குண்டான அபராத தொகை 70,46,196 ரூபாய் பெறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதாக 8,240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 42,78,808 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல பின்னால் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 4,728 […]

தமிழக அரசின் ஓய்வூதியர்களோ அல்லது அவரது துணைவரோ உயிரோடு இருக்கும்போதே குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்திற்கான பயன்பெற நியமனதாரர்களை நியமிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள்‌ குடும்ப பாதுகாப்பு நிதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ ஓய்வூதியதாரரின்‌ விருப்பத்தின்பேரில்‌, அவரின்‌ ஓய்வூதியத்திலிருந்து சந்தாத்‌ தொகை பிடித்தம்‌ செய்யப்பட்டு, ஓய்வூதியர்‌ இறக்கும்‌ நேர்வில்‌ அவர்தம்‌ துணைவருக்கோ அல்லது அவரது துணைவர்‌ உயிரோடு […]