நாடு முழுவதும் தற்போதைய பல அடுக்கு வரி விதிப்பு முறைக்கு பதிலாக, இனிமேல் 5% மற்றும் 18% என இரண்டு முக்கிய வரி விகிதங்கள் மட்டுமே இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய வரி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம், குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, வீட்டு விலைகளை கணிசமாக குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு […]
தமிழகத்தில் சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி பெறும் நடைமுறையில், விண்ணப்பிக்க தகுதியானவர், விண்ணப்பிக்கும் முறை, கட்டிடத்தை சுற்றி விடவேண்டிய இடம் தொடர்பான விதிகளை திருத்தி அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில் திருத்தம் செய்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்: ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில், சுயசான்று குடியிருப்பு கட்டிடம் என்பது 2,500 சதுரஅடி மனை பரப்பில் 3,500 சதுரஅடி வரையில் குடியிருப்பு கட்டிடம் அதாவது, அதிகபட்சம் ஒரு தரைதளம் […]
அதிமுக அரசு அமைந்ததும் கோரைப்பாய் நெசவு செய்பவர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணத்தில் கீழ்பென்னாத்தூரில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நாமெல்லாம் விவசாயிகள். அதிமுக 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களைக் கொடுத்து பொற்கால ஆட்சியைத் தந்தது. மழை, வெள்ளம் எதுவுமே பிரச்சினையாக இருக்கவில்லை. திமுகவின் 51 மாத ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. ஒவ்வொரு தொகுதிக்கு நான் […]
தமிழகத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை ஓரிரு இடங்களில மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த […]
சொத்துக் குவிப்பு வழக்கு மறுவிசாரணைக்குத் தடை கோரி அமைச்சர் ஐ. பெரியசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை செய்ய உள்ளது. தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் 2006-2010 வரையிலான காலகட்டத்தில் வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் […]
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஜோத் காட்டியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். அதேபோல ஜங்லோட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவங்களால் 50-க்கும் […]
உரிய விதிகளுக்கு உட்பட்டு கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் தவணைகளில் ஆறாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் நிதி உதவி பிரதமரின் பேறுகால தாய்மார்கள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இத்திட்டத்தின் விதிகளை 22 டிசம்பர் 2022 அன்று அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ், தகுதியான கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ரூ.5,000/- தொகை வழங்கப்படுகிறது. தகுதியான பயனாளி மருத்துவமனையில் […]
மருத்துவ படிப்பிற்கு இடம் பெற்று தருவதாக கூறி இடைத்தரகர்கள் என்ற பெயரில், இலட்சக்கணக்கான பணத்தை பொது மக்களிடமிருந்து பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் குறித்த புகார்கள் சமீப காலமாக பெறப்படுகிறது என்றும், இது போன்ற இடைத்தரகர்கள் யாரையும் பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கை, நீட் தேர்வில் தேர்ச்சிப் […]
மூளையை திண்ணும் அமீபா பாதிப்பால் கேரளாவில் 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் தமரசேரி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடும் காய்ச்சல் காரணமாக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 14-ம் தேதி சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமியின் இறப்புக்கான காரணம் குறித்து நுண் உயிரியியல் பரிசோதனைக் கூடத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது […]
பள்ளிக்கல்வித் துறையில் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அரசாணையில்; நடப்பு கல்வியாண்டில் (2025-26) 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிட்டார். அதை செயல்படுத்தும் விதமாக தற்போது 20 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் […]