உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவலை அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான […]
டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதியாகி வருகின்றனர். அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், கொசுக்களின் உற்பத்தியும், டெங்கு பாதிப்பும் மேலும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண்கள், பெண்களுக்கு […]
கரூர் சம்பவத்தை தொடர்ந்து நான் விஜய்யுடன் செல்போனில் பேசவில்லை” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தவெகவினர் விருப்பப்பட்டே அவர்களின் கொடியுடன் வந்து எனக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். தலைமையின் அனுமதியை பெற்றே வரவேண்டும் என தவெகவினரிடம் எங்கள் மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தினார்கள். ஆனாலும், அவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் சில கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. கரூர் சம்பவத்தை […]
இறந்தவர்களை வைத்து தமிழக வெற்றிக் கழகம் அற்ப அரசியல் செய்கிறது, அதற்கு அதிமுகவும் பாஜகவும் துணை நிற்பதாகவும் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டயுள்ளார். இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர் துயர சம்பவம் நடந்தவுடனே எந்தவித அரசியலுக்கும் இடம் கொடுக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் உறுதுணையாக இருந்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் […]
தமிழகத்தில் மதுரை, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், நாளை முதல் 16-ம் தேதி வரை […]
தீபாவளி பலகாரங்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உணவு பொருட்களை மற்ற வணிகர்களுக்கு விற்பனை செய்யும் முன் அவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் / பதிவு சான்றிதழ் பெறப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் புரிவது உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவு 31 -ன் படி […]
நீதிமன்றத்தில் இன்று அண்ணாமலை நேரடியாக டி.ஆர்.பாலுவிடம் குறுக்கும் விசாரணை செய்ய உள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து குற்றச்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்றும் […]
பட்டுக்கோட்டையில் 4 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர். பட்டுக்கோட்டை 31வது வார்டு கவுன்சிலர் குமணன், 4வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன், 28வது வார்டு கவுன்சிலர் லதா ஆண்ட்ரூஸ், 20வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 4 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர். பட்டுக்கோட்டை 31வது வார்டு கவுன்சிலர் குமணன், 4வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன், 28வது வார்டு கவுன்சிலர் லதா ஆண்ட்ரூஸ், 20வது […]
செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சை, நெல்லை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் மத்திய அரசு சார்பில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகிறது. போலியோ சொட்டு மருந்து என்பது போலியோ நோயைத் தடுப்பதற்கான ஒரு தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசி ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படுகின்றது. மேலும் இந்த தடுப்பூசி போடுவதற்கான முகாம்கள் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் […]
ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைக்கான தேர்வில் 9,085 விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு தகுதிப் பெற்றுள்ளனர். மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் செப்டம்பர் 14-ம் தேதி நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைக்கான தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 9,085 விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு தகுதிப் பெற்றுள்ளனர். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சேவை பிரிவு தேர்வு வாரியம் தகுதிப் பெற்றுள்ள விண்ணப்பதாரரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி, கேரள மாநிலம் […]

