கிட்னி முறைகேடு தொடர்பாக விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டு ஒரு மாதம் கடந்தும், தமிழக அரசு ஏன் இன்னும் விசாரணையை தொடங்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில்; திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடைபெற்றதாக […]

வரலாற்று ஆய்வாளரும், தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். காசிநாதன் பல்வேறு கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், பழமையான சிற்பங்கள், நடுகற்களை கண்டுபிடித்த பெருமைக்குரியவர். தமிழரின் தொன்மையை நிலைநாட்ட பூம்புகார் ஆழ்கடலாய்வு உள்ளிட்ட பல ஆய்வுகளைச் செய்தவர். வட்டெழுத்துக் […]

தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,710 சிறப்பு பேருந்துகள் என 4 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,268 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு […]

உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025- 2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமை கோட்டிற்குக்கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் […]

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். நாடு முழுவதுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கேட் நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் […]

வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்புக்காக தலைமை ஆசிரியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழைக் காலம் என்று அழைக்கப்படுகின்றது. தென்னிந்தியத் தீபகற்பத்தின் முக்கிய மழைக்காலம் இதுவே, குறிப்பாக கிழக்குப் பகுதியான கரையோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவை. தமிழ்நாட்டின் மிக முக்கிய மழைக்காலமான இப்பருவமழையின் போது மட்டும் […]

காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு மற்றும் முதல் பருவத் தேர்வு கடந்த செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்களுக்கு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை தொடர் விடுமுறை வழங்கப்பட்டது. […]

தலைவர் அண்ணாமலை பெயரை சொல்லி 10 லட்ச ரூபாய் பணம் கேட்டு பா.ஜ.க-வினர் மிரட்டுவதாக இளைஞர் ஒருவர் வீடியொ வெளியிட்ட நிலையில், அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். கோவை மாவட்டம், அன்னூர் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் – நாகமணி தம்பதி. விவசாயிகளான இவர்களது மூத்த மகன் திருமூர்த்தி. தனியார் நிறுவன ஊழியரான இவர் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான […]

கரூர் சம்பவம் தொடர்பாக நீதிபதிகள் மீது அவதூறு பரப்பிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் தவெக பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்திற்கு பிறகு, அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன் உரிய நிபந்தனைகளை விதிக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி என். […]

பொதுக்கூட்டங்களுக்கான பாதுகாப்பு விதிகள் வகுக்கப்படும் வரை அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் நடத்திக் கொள்ள இடைக்கால அனுமதியை அரசு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை பிறப்பித்த சில உத்தரவுகளைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதிகள் […]