பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் திமுக அரசு எத்தகைய ஏமாற்று வேலையை செய்துவிடக் கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தேனோ, அந்த ஏமாற்று வேலையை ககன் தீப் சிங் குழுவை பயன்படுத்தி சாமர்த்தியமாக செய்திருக்கிறது. ககன் தீப் சிங் […]

இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியகாற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த […]

தற்காலிக பட்டாசுக் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2025-ஆண்டு தீபாவளிப்பண்டிகை 20.10.2025 தேதியன்று கொண்டாடப்படவுள்ளது. அதன் பொருட்டு, தற்காலிக பட்டாசுக்கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008 -இன் கீழ் தற்காலிக பட்டாசுக்கடை வைக்க உரிமத்திற்கான விண்ணப்பங்களை https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணைய முகவரியில் அல்லது இ-சேவைமையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். தற்காலிக பட்டாசு கடைக்கான உரிமம் பெற […]

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, 2026-27 – ம் ஆண்டு சந்தைப்படுத்தல் நடவடிக்கையாக ரபி பருவத்தில் பயிரிடப்படும் கட்டாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைகளை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு அவர்களது வேளாண் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதற்காக, 2026-27-ம் ஆண்டு சந்தைப்படுத்தல் நடவடிக்கையாக ரபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.குங்குமப்பூவிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை […]

தமிழக முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகளை அடைப்பது வழக்கம். அதன்படி, டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பார்கள். நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழக முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி […]

நாடு முழுவதும் 5862 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, அதிகரித்துள்ள மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளின் கல்வித் தேவைகளை எளிதாக்கும் வகையில் நாடு முழுவதும் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது. 2026-27 முதல் ஒன்பது ஆண்டு காலத்தில் 57 […]

தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலான அரசுத் துறை சார்ந்த வாகனங்களுக்கான பதிவுச் சான்று செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகமான மாசு மற்றும் சாலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்ட பழைய வாகனங்கள் குறித்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மத்திய அரசு பழைய வாகனங்கள் தொடர்பான கொள்கையை கடந்த 2021-ல் வெளியிட்டது. இதன்படி, 10 வருடங்கள் பயன்பாட்டில் இருந்த டீசல் மற்றும் 15 வருட பெட்ரோல் […]

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி பதறுவது ஏன்?’ என அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது. இது குறித்து அதிமுக வெளியிட்ட அறிக்கையில்; கூட்ட நெரிசல் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறோம் என்று திமுக அரசு அறிவித்த பிறகு, மின்துறை அதிகாரி, மாவட்ட ஆட்சியர், சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் செய்தியாளர் சந்திப்பு நடத்துகின்றனர். டிஜிபி […]

நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, செந்தில் பாலாஜி இத்தனை பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கரூர் தவெக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து, இந்த துயர நிகழ்வு தொடர்பான விசாரணை, பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற […]

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். விளையாட்டுகளில் சிறந்து விளங்குவோரை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டுகளில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கிய விளையாட்டு வீரருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதும், விளையாட்டில் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை செய்துவரும் விளையாட்டு வீரருக்கு அர்ஜூனா விருதும், விளையாட்டு மேம்பாட்டிற்கு வாழ்நாள் பங்களிப்பை அளித்தவருக்கு அர்ஜூனா விருதும் (வாழ்நாள்) வழங்கப்படுகிறது. சர்வதேச விளையாட்டுகளில் […]