மாநில தகுதி தேர்வுக்கு சான்றிதழ் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. செட் தேர்வு எழுதியவர்களில் தமிழ்வழி ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை கோரும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தாங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை (மாதிரி படிவத்தில் உள்ளபடி) உரிய அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம் […]
முதல்வர் மருந்தகங்களில் குழந்தைகளுக்கான மருந்துகள் மற்றும் தோல், புற்றுநோய் உள்ளிட்ட பல மருந்துகளுக்குகடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கும் நோக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடியால் நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்ட மக்கள் மருந்தகத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டி ‘முதல்வர் மருந்தகம்” என்ற பெயரில் தமிழகத்தில் திறந்தது திமுக அரசு. […]
சிறு மற்றும் அடித்தட்டு விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு, ‘பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு, 60 வயது நிறைவடைந்த பின், மாத ஓய்வூதியமாக ரூ.3,000 வழங்கப்படும். செப்டம்பர் 12, 2019 அன்று தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் மன்தன் யோஜனா (PM-KMY) நாடு முழுவதும் உள்ள அனைத்து நில உரிமையாளர் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் (SMF) சமூகப் பாதுகாப்பை வழங்கி வருகிறது. இந்த […]
அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்குவதற்காக ரூ.15.48 கோடியை பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கீடு செய்துள்ளது. அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே, ஜூடோ, சிலம்பம் உட்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். மாணவிகளுக்கு கையில் எளிதில் கிடைக்கும் பென்சில், பேனா ஆகிய பொருட்களைக் கொண்டு தற்காத்துக் கொள்வது தொடர்பாக பயிற்சியில் கற்றுத்தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் […]
சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் டால்மியா பாரத் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் (Home Health Alde) பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் […]
ரயில் நிலையங்களில் ‘ரீல்ஸ்’ எடுத்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ரெயில் நிலையங்கள், ரயில் பெட்டிகள், தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுத்து பதிவிடும் பழக்கம் அதிகமாகி வருகிறது. ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு ரீல்ஸ் எடுப்பதால் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க ரயில்வே துறை […]
இந்திய அரசு 15-6-1999ல் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பட்டியல்கள் தொடர்பான ஆணைகளில் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்துதல் ஆகியவற்றிற்கான கோரிக்கைகளை முடிவு செய்வதற்கான வழிமுறைகளை வகுத்துத் தந்துள்ளது (இது மேலும் 25-6-2002 மற்றும் 14-9-2022ல் திருத்தப்பட்டது). இந்த வழிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட மாநில அரசு / யூனியன் பிரதேச நிர்வாகம் நியாயப்படுத்தி பரிந்துரைத்துள்ள மற்றும் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் ஆகியவற்றால் ஒப்புக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு […]
தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக ஆகஸ்ட் 3, 4 ஆகிய நாட்களில் சென்னை பொது அஞ்சலகம் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் சென்னை பொது அஞ்சலகத்தில் புதிதாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில் நுட்ப மென்பொருள் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கொள்கையின்படி, நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். இந்த மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவையை, தடையற்ற, பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவதற்கு ஏதுவாக […]
தருமபுரி மாவட்டம் உழவன் கொட்டாய் அருகே கட்டுப்பாட்டை இழந்த காலாவதியான அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியதில், விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: தருமபுரி மாவட்டம் […]
நீலகிரி, தேனி, தென்காசி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகின்றன. இதன் காரணமாக இன்று முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும், […]