தமிழகத்தில் விசாரணை நடத்த சிபிஐக்கு வழங்கப்பட்டு இருந்த முன் அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946, (Delhi Special Police Establishment Act, 1946 Central Act XXV […]
அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரிய வழக்கில் இன்று தீர்ப்பு. போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீடு உள்பட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் 20 மணி நேர விசாரணைக்குப் பிறகு நேற்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை […]
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் யூடியூப் பயன்படுத்துபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பயனர்கள் யூட்யூபில் சேனல் ஒன்றை ஆரம்பித்து வீடியோ பதிவுகளை பதிவுகள் மூலம் பணம் சம்பாதிக்கும் நடைமுறை உள்ளது. யூடியூப் சேனல்கள் வைத்திருப் பவர்கள் பணம் சம்பாதிக்க மானிடைசேஷன் ரூல்ஸ் மற்றும் பாலிசிகளை யூடியூப் நிறுவனம் கடைபிடித்து வருகிறது. ஒரு சேனல் வைத்திருப்பவர் ஒரு ஆண்டில் குறைந்தது 1000 சப்ஸ்கிரைபர்கள் மற்றும் 4000 மணி […]
புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியில் 2023-24 -ஆம் கல்வி ஆண்டிற்க்கான இளங்கலை, முதுநிலைபட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி (01-06-2023) வியாழக்கிழமை முதல் ஜூன் மாதம் முப்பதாம் தேதி வெள்ளிக்கிழமை (30-06-2023) வரை சமுதாயக் கல்லூரியின் இணையதளமான http://pucc.edu.in மூலம் விண்ணப்பிக்கலாம். புதுவைப் பல்கலைக்கழகச் சமுதாயக் கல்லூரியில் படித்து பயன்பெற விரும்புபவர்கள் புதுவைப் பல்கலைக்கழகச் சமுதாயக் கல்லூரியின் இணையதளமான […]
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள முன்னாள் படைவீரர்கள் நலத்துறை, கோட்டக் மகிந்திரா ஆயுள் காப்பீட்டு நிறுவனமிடையே டெல்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்து முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம், கையெழுத்திடப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் ஷரத் கபூர், இந்தக் கூட்டாண்மை நமது முன்னாள் படைவீரர்களுக்கு தொழில்துறை மற்றும் பெரு நிறுவனங்கள் குறித்து மேலும் பல வாய்ப்புகளை வழங்குவதோடு, […]
பாலாஜியின் கைது நடவடிக்கையை தொடர்ந்து சட்டவல்லுநர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். செந்தில்பாலாஜி முக்கிய துறைகளின் அமைச்சராக இருப்பதால், மாற்று ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீடு உள்பட […]
இன்று காலை 10 மணி அளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார். போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீடு உள்பட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் 20 மணி நேர விசாரணைக்குப் பிறகு இன்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியை […]
அமலாக்கத் துறையின் சோதனை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது. இன்று அதிகாலையில் சென்னை பசுமைவழிச்சாலை வீட்டிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் செல்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் பன்னோக்கு […]
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும். 2023-2024ம் கல்வியாண்டில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு , பள்ளிகள் திறப்பதற்கு முன்பு செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து அறிவுரைகள் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டது . கடந்த வாரம் கோடை வெயிலின் தாக்கம் குறையாத காரணத்தினால் முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி பள்ளிக்கல்வித்துறை […]
சேலம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் 50% மானியத்தில் 250 எண்ணிக்கையில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 2023-24 ஆம் நிதியாண்டில் நாட்டு கோழிவளர்ப்பில் திறன் வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டு கோழிப்பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்த மாவட்டம் ஒன்றுக்கு 3-6 பயனாளிகளை தேர்வு செய்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் […]