நேபாளத்தின் வடக்கு பகுதியில் திபெத் எல்லையையொட்டி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. போதே கோசி ஆற்றில் ஏற்பட்ட இந்த திடீர் நீர்வரத்து காரணமாக ராசுவா மாவட்டத்தில் வீடுகள், வாகனங்கள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தின் முழுமையான பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை சுமார் 9 மணியளவில் போதே கோசி ஆற்றில் திடீரென நீர்மட்டம் […]
மத்திய பிரதேசத்தில் மருத்துவமனையில் இருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் இருந்த பை காணாமல் போனதாக எழுந்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, எதிர்பாராத திருப்பமாக நாய் ஒன்று அந்த பையை தூக்கிச் சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் பையை மருத்துவமனை வளாகத்திலேயே கண்டுபிடித்து, அதிலிருந்த நகைகள் மற்றும் பணத்தை பத்திரமாக மீட்டுள்ளனர். மந்த்சோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் […]
நடிகை கவுதமி தொடர்புடைய நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் பல மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தொழிலதிபர் அழகப்பன், நேற்று மாலை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை தீவிரமடைந்துள்ளது. வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையாக கடந்த ஜூன் மாதம் அழகப்பனுடன் தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். […]
பிறப்புச் சான்றிதழ் முதல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் வரை பல்வேறு அரசு சேவைகளுக்காக அலுவலகங்களுக்கு நேரில் செல்வதைத் தவிர்க்கும் வகையில் தமிழக அரசு புதிய டிஜிட்டல் முயற்சியை மேற்கொள்ள உள்ளது. பொதுமக்கள் தங்களது கைபேசியிலேயே சுமார் 500 அரசு சேவைகளைப் பெறும் வகையில் ‘வெற்றி தமிழ்நாடு சூப்பர் செயலி’ உருவாக்கப்பட உள்ளது. இந்த புதிய செயலி ரூ.5 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரே தளத்தின் மூலம் பல்வேறு துறைகளின் […]
கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து முன்னாள் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை. வழக்கு அவசரமாக எடுத்துக்கொள்ளப்படாது என்றும், வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை வழக்கமான விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட வி.எஸ். பாபு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்டாலின் […]
டெபிட் கார்டை வீட்டில் மறந்து சென்றுவிட்டாலும் இனி கவலைப்பட வேண்டியதில்லை. UPI வசதி கொண்ட ஏடிஎம்கள் மூலம், கையில் டெபிட் கார்டு இல்லாமலேயே வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்துக்கொள்ள முடியும். இதற்காக Google Pay, PhonePe, Paytm உள்ளிட்ட பிரபலமான UPI செயலிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம். இந்த வசதி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், நாடு முழுவதும் உள்ள பல வங்கி ஏடிஎம்களில் தற்போது படிப்படியாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. UPI மூலம் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் விபரீதமாக முடிந்துள்ளது. 32 வயது பெயிண்டரை காரில் மோதி கீழே தள்ளிய மர்ம கும்பல், பின்னர் ஆயுதங்களுடன் விரட்டி சென்று கொடூரமாக வெட்டிக்கொலை செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வெங்கல் அருகே உள்ள சிற்றத்தூரைச் சேர்ந்த மாரி என்ற ரூபன் (32), பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவர் மீது ஏற்கனவே சில குற்ற […]
அரியானா மாநிலம் பரீதாபாத்தில் கணவரை கொலை செய்து, அவரது உடலை வீட்டின் அருகே புதைத்ததாக மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் குற்றப்பிரிவு போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். பரீதாபாத்தில் 42 வயதுடைய சியாம்வீர் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், அவரது மனைவிக்கும் காமத் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பு குறித்து சியாம்வீருக்கு தெரியவந்ததால், மனைவியுடன் அவர் அடிக்கடி தகராறில் […]
பிரசவத்துக்குப் பிறகு பெண்களின் உடலில் மட்டுமின்றி, மனநிலையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானது. ஆனால் சிலருக்கு இந்த மாற்றங்கள் தீவிரமான மனநலப் பிரச்சினைகளாக மாறக்கூடும். இதுபோன்ற சூழலில், “குழந்தை பிறந்ததால் ஏற்படும் வழக்கமான மன அழுத்தம்” என்று அலட்சியப்படுத்தாமல், அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனித்து உரிய மருத்துவ உதவியைப் பெறுவது அவசியம். 2023ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளைக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த லிண்ட்சே கிளான்சி வழக்கு, பிரசவத்துக்குப் பிந்தைய […]
தரமானது, இயற்கையானது, ரசாயனங்கள் இல்லாதது என பல்வேறு விளம்பரங்களுடன் சந்தையில் ஏராளமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உணவுப் பொருட்கள் மட்டுமின்றி பற்பசை, சோப்பு, ஷாம்பு, சமையல் எண்ணெய், தேன், மசாலா பொருட்கள் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டுப் பொருட்களிலும் தரம் மற்றும் கலப்படம் தொடர்பான கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. பொருளின் அட்டையில் இடம்பெறும் “இயற்கையானது”, “ஆர்கானிக்”, “100 சதவீதம் தூய்மையானது” போன்ற வார்த்தைகள் நுகர்வோரின் கவனத்தை எளிதில் ஈர்க்கின்றன. ஆனால், […]

