வியர்வை பொதுவானது. கோடைக்காலங்களில் உடலில் வரும் வியர்வை உடல் வெப்பநிலையை குளிர்ச்சியாக்க செய்கிறது என்பதை அறிவோம். ஆனால் அதீத வியர்வை என்பது ஹைப்பர் அஹிட்ரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது அக்குள் மட்டும் அல்லாமல் உடல் முழுவதும் வியர்வையை உண்டு செய்யும். அக்குள் வியர்வை என்பது அதிக அசெளகரியத்தை உண்டு செய்யலாம். அது தவிர்க்க வேண்டியதில்லை என்றாலும் அதனுடன் வெளிவரும் துர்நாற்றம் மோசமானதாக இருக்கும் நிலையில் அக்குள் வியர்வை தவிர்ப்பதே நல்லது. […]

டீ குடிக்கும்போது வெறுமனே டீயை மட்டும் குடிக்காமல் அதோடு கூடவே இரண்டு பிஸ்கட் அல்லது ரஸ்க் முக்கி சாப்பிட்டால் டீ, ரஸ்க் ரெண்டுமே கொஞ்சம் சுவை கூடுதலாக இருப்பது போல தோன்றும். ஆனால் இந்த பழக்கம் உங்களுடைய ரத்த சர்க்கரை அளவு மற்றும் பிற உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நம்மில் பலருக்கும் டீ குடிக்கும்போது அதோடு கூடவே ஏதாவது ஸ்நாக்ஸ் சேர்த்து சாப்பிட்டே ஆக வேண்டும். […]

உலகளவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வெள்ளை அரிசியை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஜப்பானியர்கள் வெள்ளை அரிசியை தங்கள் உணவின் மிக முக்கிய பகுதியாக உட்கொண்டு வருகின்றனர். வெள்ளை அரிசியை அதிகளவு பாலிஷ் செய்வதால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் இழக்கப்படுகிறது. வெள்ளை அரிசியில் அதன் தவிடு மற்றும் கிருமி நீக்கப்பட்டு எண்டோஸ்பெர்ம் மட்டும் காணப்படுகிறது. இது சுவையை மேம்படுத்தவும், ஆயுளை நீட்டுக்கவும், சமையல் பண்புகளை மேம்படுத்தவும் உதவுகிறது. […]

கணவர் இறந்துவிட்டாலும், ஒரு பெண்ணின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் உரிமையாக பாதுகாப்பான தங்குமிடத்தை அங்கீகரிக்கும் வகையில், மனைவியை அவரது திருமண வீட்டிலேயே வசிக்க அனுமதியளித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு கணவர் இறந்த பிறகும், அந்தப் பெண்ணும் அவரது குழந்தையும் கணவரின் வீட்டிலேயே வசித்து வந்தனர். இருப்பினும், அவரது கணவரின் தாயார் மற்றும் உடன்பிறந்தவர்கள் தொடர்ந்து அவரைத் துன்புறுத்தத் தொடங்கியதால், அவர் பாதுகாப்பு கோரி பாலக்காடு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை […]

நம்மில் பல பேர் இந்த தவறை செய்வது உண்டு. தூங்கும் போது கூட விளக்குகளை போட்டுக் கொண்டு தூங்குவது உண்டு. ஆனால் உண்மையில் ஒளியானது தூக்கத்தில் ஆழமான தாக்கத்தை உண்டாக்குகிறது. தூங்குவதற்கு இருள் என்பது மிகவும் அவசியம். இருட்டாக இருக்கும் போது உங்கள் உடல் சமிக்ஞைகளை அனுப்பி தூக்கத்தை தூண்டுகிறது. அதிக வெளிச்சத்தில் தூங்குபவர்களுக்கு உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல் நலப் பாதிப்புகள் […]

18வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. ஈ சாலா கப் நம்தே என தொடர்ந்து முழங்கி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் பெங்களூரு அணி ஏற்கனவே 3 முறையும், பஞ்சாப் அணி ஒரு முறையும் இறுதிப் போட்டிகளில் விளையாடிய நிலையில், கோப்பை கனவு, கனவாகவே நீடித்து வந்தது. நடப்புத் தொடரில், முதல் இரு […]

பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இதில் குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்ததம் ரத்து அமைந்து இருந்தது. பாகிஸ்தானின் 80 சதவீத விவசாயம் சிந்து நதி நீரை நம்பியிருப்பதால், இந்தியா அந்த நீரை நிறுத்த எடுத்து இருக்கும் முடிவு பாகிஸ்தானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் சீனா இப்போது சில கருத்துகளைத் தெரிவித்துள்ளது. பீஜிங்கில் உள்ள சீனா மற்றும் உலகமயமாக்கல் […]

சைக்கிளை எல்லோரும் நிச்சயமாக பயன்படுத்தியிருப்போம். ஒரு காலத்தில் போக்குவரத்திற்கு முக்கிய சாதனமாக சைக்கிள் விளங்கியது. ஆனால் இன்று இதை பெரும்பாலும் உடற்பயிற்சிக்காக மட்டும் பயன்படுத்தும் நிலை வந்துள்ளது. அதாவது, 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் குறைந்து ஒரு சைக்கிள் ஆவது இருக்கும். காலப்போக்கில் இரண்டு சக்கர மேட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லச் செல்ல வீட்டுக்கு இரண்டு மேட்டார் வாகனங்கள் என்ற நிலை […]

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி 33 நாடுகளுக்கு எடுத்துரைப்பதற்காக சென்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளின் குழு அடுத்த வாரம் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளனர். கடந்த ஏப்ரல் 22-ந்தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத் தளத்தில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் […]

நடப்பாண்டில் கோவிட்-19 மீண்டும் பரவுவது கவலைகளை எழுப்பியுள்ள நிலையில், 2030 ஆம் ஆண்டில் இன்னும் கொடிய அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஜப்பானிய பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தியா மட்டுமல்லாமல் சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக, அரசாங்கம் பொதுமக்களிடம் தங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுமாறும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா முதன்முதலில் 2019 ஆம் […]