முட்டையை உட்கொள்வதால், கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து இதயத்தை பாதிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுப் பொருளான முட்டையில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. முட்டையில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மிதமான அளவு சோடியம் உள்ளது. இதில் தாமிரம், அயோடின், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, செலினியம் மற்றும் துத்தநாகம் […]

உடல், சருமம், கேசம் உள்ளிட்டவைகளின் ஆரோக்கியத்திற்கு உறுதியளிக்கும் அற்புத பானம் தேங்காய்ப்பால் ஆகும்.. இதில் அடங்கியுள்ள நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். தேங்காயை பொருத்தவரை அதன் மரத்தின் வேர் முதல் தேங்காய் தொட்டிவரை அனைத்து வகையிலும் மக்களுக்கு பயன்படுகிறது. இந்த தேங்காயில் எண்ணிலடங்காத நன்மைகள் அடங்கியுள்ளன. அதன்படி, தேங்காய்ப் பாலிலும், வைட்டமின் சி, வைட்டமின் இ, பி1, பி3, பி5, பி6, இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், மெக்னீஸியம், பாஸ்பரஸ் […]

சென்னையில் பொது குளியளறையில் செல்போனை மறைத்து வைத்து பெண்கள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்துவந்த நபரை கையும் களவுமாக பிடித்து மக்கள் போலீசில் ஒப்படைத்தனர். சென்னை வடபழனி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 10க்கும் மேற்பட்ட வீடுகளும் அவற்றிற்கு பொது குளியலறையும் உள்ளது. இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி அங்குள்ள குளியளறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, ஜன்னல் வழியாக மர்மநபர் ஒருவர் வீடியோ எடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை […]

நமது ஸ்மார்ட் போன்களில் தானாக பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் சில செயலிகள் மூலம் பல மோசடிகளை தடுக்கும் வகையில், போனில் மறைந்திருக்கும் அப்ளிகேஷன்களை எப்படி டெலிட் செய்வது உள்ளிட்டவைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாதவர்களே இல்லை என்றும் சொல்லும் அளவுக்கு உலக மக்களிடையே ஸ்மார்ட் போன் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஓய்வு நேரங்கள் மட்டும் இன்றி பயணங்களின் போது ஏன்.. […]

தமிழகம் முழுவதும் பயோமெட்ரிக்யோடு, கண் கருவிழி மூலம் நியாய விலைப் பொருட்களை மக்கள் வாங்கி செல்லும் வகையில் புதிய திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழத்தின் சார்பில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 செயல்முறை கிடங்கு கட்டுவதற்கு காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் சென்னையில் இருந்து அடிக்கல் நாட்டினார். […]

தேங்காய் பூவில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் அதிலுள்ள மூலக்கூறுகள் பல பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய உயிரை பறிக்கும் கொடிய நோய்களுக்கு மருந்தாகிறது. மேலும் இதில் உள்ள நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் இளநீர், தேங்காய் மற்றும் தேங்காய் தண்ணீரில் உள்ள ஊட்டச்சத்துக்களை விட மிக அதிகளவிலான ஊட்டச்சத்துக்களை கொண்டது தேங்காய் பூ. அதன்படி, இந்த பூவில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட் சருமத்தை பொழிவுடனும், சுருக்கங்கள் இல்லாமலும் இளைமையை தக்கவைத்துக்கொள்ள […]

5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளிடம் ஒரு தந்தையின் உரிமையை மறுக்க முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பெங்களூரில் 7வயது சிறுமிக்கு தந்தையும் பாதுகாப்பு வழங்கலாம் என்ற குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிறுமியின் தாய் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் அலோக் ஆராதே மற்றும் விஸ்வஜித் ஷெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, தாயின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, குழந்தைக்கு […]

நெயில் பாலிஷ், ஷாம்பு உள்ளிட்ட பொருட்களில் கலக்கப்பட்டிருக்கும் கெமிக்கல்கள் பெண்களுக்கு டைப் 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மனிதர்களாகிய நாம் எல்லோரும் அழகாக இருக்கவே விரும்புகிறோம். அழகு தன்னம்பிக்கையை அளிக்க கூடியதும் கூட. அழகு சாதனப்பொருட்கள் இன்றைக்கு ஆண்கள், பெண்கள் இருபாலினரும் பயன்படுத்தும் அத்தியாவசியமான தேவையாகிவிட்டது. நாம் பல்துலக்க, குளிக்க, வாசனை உண்டாக்க பற்பசை, சோப், ஷாம்பு, பாடி ஸ்பிரே ஆகியவற்றை உபயோகிக்கின்றோம். நம்முடைய அழகினைக் […]

வரும் 13ம் தேதி முதல் வட்டார மற்றும் மாவட்ட, மாநில அளவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படும் என்றும் அதில் வெற்றிபெறுபவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இந்தநிலையில், இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் […]

உரிமம் மற்றும் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்ததற்காக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் இருந்து விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவது இப்போது அதிகரித்துவிட்டது. பெரும்பாலானோர் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் வாங்குவதை முதன்மையாக பயன்படுத்துகின்றனர். அந்த இரு தளங்களிலும் மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கும் என்பது பிரதான எண்ணமாக மக்களிடையே இருக்கிறது. இந்தநிலையில், அதில் இந்நிறுவனங்கள் […]