மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவின் டி.எஸ்.பி சுந்தரேசன், அலுவலக வாகனம் இல்லாமல் நடந்தே பணிக்குச் சென்ற வீடியோ வைரலான நிலையில், நேர்மையாக இருப்பதால் தான் தனக்கு இத்தனை சிக்கல் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கொலை வழக்கிலும், பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான என்கவுன்டரிலும் விசாரணை செய்ததற்குப் பின்னர், சுந்தரேசன் மயிலாடுதுறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு பொறுப்பேற்றதிலிருந்து கள்ளச்சாராயம், மதுபான […]

கோவையில் லஞ்சம் வாங்கிய இந்து சமய அற நிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். சூலூரை சேர்ந்த சுரேஷ் என்பவரின் தனியார் கோயில் நிதி பிரச்சனையை தீர்த்து வைக்க அற நிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அதில் ரூ.1.5 லட்சத்தை முதலில் கொடுப்பதாக கூறியுள்ளார். ரசாயணம் தடவிய லஞ்ச பணத்தை கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச […]

திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதற்கு பதிலடியாக அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பலர் இரவோடு இரவாக திமுகவில் இணைந்தனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொகுதி பேரத்தை தொடங்கிய நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தான் நிலைக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின், கட்சியிலும் […]

திருமாலின் 108 திவ்யதேசங்களில் 48-வது தலமாக விளங்கும் திருப்பாடகம் பாண்டவதூத பெருமாள் கோயில், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான வைணவ திருத்தலம். இங்கே, மகாபாரதக் கதையின் ஒரு முக்கியமான தருணமான ‘பாண்டவர்களின் தூதராக’ கண்ணன் தோன்றும் காட்சி, கோயிலின் முக்கிய தரிசனமாக இருக்கிறது. இந்த கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் சோழர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோராலும் புதுப்பிப்பு மற்றும் விரிவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக குலோத்துங்க சோழன், ராஜ ராஜ […]