சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை பட்டினப்பாக்கத்தில் சுமார் 25.55 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கத் திட்டமிட்ட தமிழக அரசு, அதற்கான அரசாணையை கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியிட்டது. ஆனால், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் குடியிருப்புகள் பாதிக்கப்படும் எனக்கூறி, […]
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் தம்பதியினர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவர் விவாகரத்து கோரியும், மனைவி திருமண உரிமைகளை மீட்டெடுத்துத் தரக் கோரியும் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள், இரு தரப்பினரின் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தனர். இந்த வழக்கின் விசாரணையின்போது, கடந்த அரை நூற்றாண்டில் பெண்கள் அதிகளவில் கல்வி பயின்று, பல்வேறு […]
மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பதிவான வாக்குகள் அக்டோபர் 9-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தேர்தலில் ஆளும் தவெக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் தனித்தனியே […]
தமிழகத்தில் நிலவி வரும் தீவிர பருவநிலை மாற்றத்தின் காரணமாக, டெங்கு காய்ச்சலுடன் இணைந்து பல்வேறு வகையான சுவாசப்பாதை வைரஸ் தொற்றுகளும் ஒரே நேரத்தில் அதிவேகமாகப் பரவி வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ‘இன்ப்ளுயன்ஸா ஏ’, அடினோ, ஆர்.எஸ்.வி (சுவாச ஒத்திசைவு வைரஸ்), கொரோனா மற்றும் சின்னம்மை போன்ற காற்றுவழி பரவும் நோய்களுடன், ‘ஸ்கிரப் டைபஸ்’ எனப்படும் உண்ணி காய்ச்சலின் தாக்கமும் பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. இந்த தொற்றுகளால் […]
ஜெம் வீரமணிக்கு மீதான பாலியல் வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அது எவ்வளவு பெரிய இடமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. இத்தனை ஆண்டுகளாக, பல சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது என்பது, ஒரு சமூகமாக வெட்கித் […]
தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட பல லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதை தடுக்க தவறிய தவெக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அனுபவமற்ற விளையாட்டுப் பிள்ளைகளால் வழிநடத்தப்படும் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சியில், விவசாயிகள் எதிர்கொள்ளும் இன்னல்கள் சொல்லி மாளாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக விமர்சித்துள்ளார். டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் […]
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏழை சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய புகாரில், பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக செயல்பட்டு வந்த 60 வயதான அவரது பெண் உதவியாளர் சாந்தி என்பவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைதான சாந்தியிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் […]
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே செல்லியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் பிரசாந்த் (29). இவருக்கும் யுவராணி என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், யுவராணி பருவாச்சி பகுதியைச் சேர்ந்த சித்தேஸ்வரன் என்ற இளைஞருடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த வெங்கடேஷ் பிரசாந்த் மனைவியை கண்டித்ததால், இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய […]
சிங்கப்பூரில் பணியாற்றி வந்த 44 வயதான தென் கொரிய நபர் ஒருவர், கடந்த 2022-ஆம் ஆண்டு ‘டிண்டர்’ செயலி வாயிலாக 45 வயது கொரிய பெண் ஒருவருடன் அறிமுகமாகி பழகி வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு நாடுகளில் வசித்து வந்த சூழலில், வீடியோ அழைப்புகள் மூலமாகவே தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். அந்த சமயங்களில் இருவரும் எல்லை மீறி நிர்வாண வீடியோ அழைப்புகளில் ஈடுபட்டபோது, அதனை பதிவு செய்ய வேண்டாம் என […]
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுக்கு களத்தில் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், இதனை தூண்டிவிடும் எதிர்க்கட்சியினர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க தவெக தேர்தல் பொறுப்பாளர்களான அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் […]

