எதிர்பார்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் இடையில் வெளியான ’தக் லைஃப்’ திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றியதற்காக இயக்குநர் மணிரத்னம் மன்னிப்பு கேட்டார் என செய்திகள் வெளியான நிலையில் தயாரிப்பாளர் சிவா ஆனந்த் மறுத்துள்ளார். ’நாயகன்’ திரைப்படத்தில் இணைந்த மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணி 38 ஆண்டுகள் கழித்து இணைந்த திரைப்படம் ‘தக் லைஃப்’. கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. கமல்ஹாசனுடன் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், […]
திமுகவின் உயர்மட்ட பொறுப்புகளில் ஒன்றான பொதுச் செயலாளர் பதவியில் தற்போது துரைமுருகன் உள்ளார். விரைவில் அந்த பதவியிலிருந்து அவர் விலக்கப்பட்டு டி.ஆர்.பாலு நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் முதல் இரண்டு முக்கிய பொறுப்புகள் என்பது தலைவர் பதவியும் பொதுச் செயலாளர் பதவியும் தான். தி.மு.க. தலைமையில் இருந்து வெளியாகும் அனைத்து அறிவிப்புகளும் பொதுச்செயலாளர் பெயரில்தான் வெளிவரும். ஒரு சில அறிவிப்புகள் மட்டுமே தலைவர் பெயரில் வரும். இந்த பொறுப்பில் […]
சிம்பு நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த சிலம்பாட்டம் படம் மூலம் கதாநாயகியாக கதா நாயகியாக அறிமுகமானவர் நடிகை சனா கான்.அதற்குப் பிறகு ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘பயணம்’, ‘ஆயிரம் விளக்கு’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு பஃப்டி அனால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதையே விட்டு விட்ட சனா […]
பைரவர் தலை மீது வைக்கப் படும் எலுமிச்சைபழம் தானாக சுற்றும் அதிசயம் வருடத்தில் ஒரு முறை மட்டுமே நடக்கும். அந்த கோவில் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். சிவபெருமானின் அம்சமாகக் கருதப்படும் பைரவர் வழிபாடு தமிழகத்தில் பெரும் பக்தி பூர்வமாக நடைபெறுகிறது. காவல் தெய்வமாக பக்தர்களால் வணங்கப்படும் பைரவருக்கு பல இடங்களில் தனிக்கோவில்கள் இருந்தாலும், வேலூர் மாவட்டம் இரங்காபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்டபுஜ காலகண்ட பைரவர் திருக்கோவில் மிகவும் அதிசயமிக்க, சக்தி […]
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கக் கோரிய வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மதுரை மாவட்டத்தில் உள்ள புனித திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த பொதுநல மனுக்கள் வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். நீதிபதி நிஷா பானு மனுக்களில் எதிலும் தலையீடு தேவை இல்லை என கூறி அனைத்தையும் தள்ளுபடி செய்திருக்கிறார். […]
கிரிக்கெட்டர் ரிங்கு சிங் – சமாஜ்வாடி எம்.பி ப்ரியா சரோஜா இருவருக்கும் நவம்பர் 19ல் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திருமணம் தள்ளிவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்டர்களில் ஒருவராக இருப்பவர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ரிங்கு சிங் (வயது 27). இந்திய அணிக்காக 33 சர்வதேச டி20 போட்டிகள், 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் இந்தியாவின் இளம் எம்பியான சமாஜவாதி […]
ஜூன் 22 அன்று, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போரின் போது, அமெரிக்கா ஈரானின் மூன்று அணுசக்தி தளங்களான நிடாஞ்ச், இஸ்ஃபஹான் மற்றும் ஃபோர்டோவை B-2 குண்டுவீச்சு விமானங்களால் தாக்கியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, கத்தாரின் தலைநகரான தோஹாவில் உள்ள அமெரிக்க தளத்தை ஈரான் ஏவுகணைகளால் குறிவைத்தது. இருப்பினும், ஈரானிய ஏவுகணைகளால் அமெரிக்க தளம் அதிக சேதத்தை சந்திக்கவில்லை. ஆனால் மீண்டும் ஒருமுறை இரு நாடுகளுக்கும் இடையிலான விரோதம் […]
மத்திய அரசில் உள்ள லோவர் டிவிசன் கிளார்க்/ஜூனியர் செயலக உதவியாளர், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் ஆகிய பதவிகளில் தேசிய அளவில் 3,131 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் துறையின் கீழ் உள்ள டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு 12-ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் கணிதம் பாடம் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். […]
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), இந்தியாவின் மூன்று பாதுகாப்புப் படைகளுக்கும் (ராணுவம், கடற்படை, விமானப்படை) அவசரகால கொள்முதலுக்காக 28 ஆயுத அமைப்புகளை வழங்கியுள்ளது. ராக்கெட்டுகள், ஏவுகணைகள், கையெறி குண்டுகள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆயுதங்கள் இதில் அடங்கும். இந்த நடவடிக்கை, பாதுகாப்புத் துறையின் தன்னம்பிக்கை உந்துதல் (Aatmanirbhar Bharat) நோக்கில் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட ஆபரேஷன் […]
கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் (101), மாரடைப்பால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பக்கவாதம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் இதய நோய் நிபுணர்கள் தலைமையிலான குழு, அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]

